திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நான் யார்?

This entry is in the series 20100115_Issue

கோமதி நடராஜன்



===========
நேற்று நான் யார்?
இன்று நான் யார்?
நாளை நான் யார்?
நான் ,யாருக்கு யார்?
எனக்கே நான் ,யார்?
புரியவில்லை தெரிய வில்லை
தெரிவது போல் தெரிகிறது
புரியவில்லை
புரிவது போல் புரிகிறது ஆனால்
தெரிய வில்லை.
நேற்று நான் புழுவாய் நெழிந்திருப்பேன்
இன்று நான் மனிதனாய் வாழ்கின்றேன்
நாளை நான் பூண்டாக மாறலாம்.
இதில் மெய் மட்டும் நானா அல்லது
மெய் கூட பொய்யா.
ஆத்மா மட்டும் நானா அல்லது
ஆத்மா கூட அனர்த்தமா?
புரிய வில்லையே!
எனக்கே நான் யார் என்று
தெரியவில்லை இதில்
உனக்கு நான் சொந்தமென்றால்
வியப்பாய் இல்லை?
உனக்கே நீ யார் என்று புரிய வில்லை
இதில்எனக்கு நீ பந்தமென்றால்
நகைப்பாய் இல்லை?
ஒருவனுக்கு நான் மகன்
ஒருத்திக்கு நான் தம்பி
ஒருவனுக்கு நான் மாமன்
ஒருத்திக்கு நான் மச்சான்
இருந்து விட்டுப் போகட்டும்
இறைவனுக்கு நான் யார்?
அது தெரிந்தால் போதும்
என் ஜென்மம் சாபல்யமாகும்
அடுத்த ஜென்மத்தில்
உயிரும் மெய்யும் உவகையுடன் ஒன்றாகும்.

Series Navigation

About கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

View all 59 articles →

நான் யார்……

This entry is in the series 20030427_Issue

ஸ்ரீராம்.


நீ செடியாய் இருந்தால் உன் வேரை தாங்கும் மண்ணாய் இருப்பேன்,
நீ மண்ணாய் இருந்தால் மண்ணில் வாழம் ஓர் ஜீவராசியாய் இருப்பேன்,
நீ ஜீவராசியாய் இருந்தால் உன்னை உயிர்பிக்கும் உயிராய் இருப்பேன்,
நீ என்பது நானாகிவிட்டதால் இனி ஏன் இந்த ‘நான் யார் ‘ கேள்வியோ !!!!!

slib@rediffmail.com

Series Navigation

About ஸ்ரீராம்

ஸ்ரீராம்

View all 8 articles →