நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


சமூகத்தின்
வெறித்தனத்திற்கெல்லாம்
சாவு மணி அடிக்க
ஏன் தயங்கினோம். ?
உணர்வில்
உயிாில்
கலந்த பின்
பிாிந்தோம்
என்பது
வேதனை தான்.
மரணித்து
காதலை வளர்ப்போம்
என்றோம்.
எனக்குள்
இருக்கும் நீயும்
உனக்குள்
இருக்கும் நானும்
வாழ்ந்து கொண்டே
நினைவுகளில்
வாழ்வோம்
என்கின்றனர்.
நீ தந்த
சின்ன| சின்ன
பாிசுப் பொருளெல்லாம்
இன்றும் என்
தலை அணையின் கீழ்
ஒளித்து வைத்திருக்கிறேன்.
உன்னை எல்லாம்
இப்போ என்
தொலை பேசி
விசாாிக்க
தவறுவதில்லை.
நமக்கு
வயதாவது போல்
சமூக வெறிக்கும்
வயதாகாதா என்ன ?
புதிதாய் அல்லவா
பிறப்பெடுக்கிறது.
சமூகம் திருந்தாது.
நாம் தான்
மாற வேண்டும்.
காலம் போகிறது
வயதும் போகிறது
வாயேன்
ஓடிப்போய்
மாலை மாற்றுவோம்.
என் நாடி
அடங்கு முன்
உனை ஒரு முறை
பார்த்திட வேண்டும்.
எங்கே இருக்கிறாய். ?
நட்பாய்
எனக்கொரு
நகல்
எழுதேன்.
_______
ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்

நீ தந்த காயம்.
____________________

குறுக்கும் நெடுக்குமாய்.
ஆமை வேகத்தில்
என் பாதங்கள்.
உன் நினைவுகளும்
நீ தந்த காயமும்
மின்னல் வேகமாய்
மனத்திரையில்
வந்து போவதாய்.

அழுவதும்
என்னை நானே
ஆசுவாசப்படுத்துவதுமாய்.
இப்படித்தான்
நேற்றய
இரவு முழுவதும்
தூக்கத்தை
தொலைத்திருந்தேன்:

காரண காாியங்கள்
எதுவுமே கூறாமல்
நீ தந்த இந்த வலி
இதை சுகமென்பதா ?
சோகமென்பதா ?
இரண்டினதும்
கூட்டுக்கலவை என்பதா ?

வெட்ட வெளிச்சமாய்
வானத்தில் முழ நிலா
எந்தன் உணர்வைப்போல்.

எனக்கும்
உனக்குமான
இந்த இடைவெளியை
தற்காலிகமாகவே
எடுத்துக்கொள்கிறேன்.

நானாக
விலக்கிக்கொண்டதல்ல
நீயாக விலகிச்செல்கிறாய்.

முகமூடியணிந்த
இந்த கலியுக ர் கூட்டத்துள்
உண்மையாக
வாழத்தலைப்பட்டது
என் தவறா ?

விழி வழியும் கண்ணீரை
துடைத்தபடி
படுக்கை வீழ்ந்தேன்.

பாவம் நீயும்
தூக்கமின்றி
உழல்கிறாயோ
எந்தன் நினைவுகளோடு.

ஐயோ வலிக்கிறதே.

நளாயினி தாமரைச்செல்வன்.
15-08-2003
nalayiny@hotmail.com

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.