தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்,


தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா
நாள்: 07-01-2011 வெள்ளி
நேரம்: மாலை 6 மணி

இடம்: பாரதிய வித்யா பவன், மினி ஹால்,
கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4.

வரவேற்புரை: அ. கணேசன், நூலாசிரியர்

தலைமை & நூல் வெளியிடுபவர்: முனைவர் தியாக. சத்தியமூர்த்தி
முன்னாள் இயக்குநர், கேரள மாநில தொல்லியல் துறை

நூல் பெறுபவர்: ஸ்வர்ணமால்யா கணேஷ்
பரத நாட்டியக் கலைஞர்

கருத்துரை:

செந்தீ நடராசன்
நிறுவனர், செம்பவழம் ஆய்வுத் தளம்

எஸ்.டி. நெல்லை நெடுமாறன்
வரலாற்று ஆய்வாளர்

ஜெ. சிதம்பரநாதன்
ஆய்வாளர், சமூக இயக்க ஆய்வு மையம் (SDRC)

ப்ரவாஹன்
ஆய்வாளர், SISHRI

ஏற்புரை: எஸ். இராமச்சந்திரன், நூலாசிரியர்

நன்றியுரை: ஜி. சாமிநாதன்
ஆய்வாளர், SISHRI

தேநீர் வேளை: மாலை 5:45 மணி

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:
நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன்
ஆய்வாளர்

விழா ஏற்பாடு:
தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்,
சென்னை – 44.

தொடர்புக்கு:
தொலைபேசி: +91-98844-55211, +91-98941-34647.
மின்னஞ்சல்: info@sishri.org
இணையதளம்: www.sishri.org

Series Navigation

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன்


ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் சில கேள்விகள்

1. கல்வியறிவோ, சுயசிந்தனையோ, தன்மான உணர்வோ இல்லாமல் நீண்ட நெடுங்காலம் ஆதிக்க சக்திகளிடம் அடங்கிக் கிடந்தார்கள் என்றால் அவர்கள் சான்றோர் என்ற சாதிப்பெயரால் அழைக்கப்பட்டார்கள் என்பது பொருத்தமாகத் தோன்றவில்லையே. அவர்கள் உண்மையில் சான்றோர்களா? சாண் நாரில் பனையேறிப் பிழைப்பு நடத்திய சாணார்களா?

2. சான்றோர் குலப் பெண்டிர் லண்டன் மிஷனரிமார் வருகைக்கு முன்னர் தோள்சீலை அணிந்திருந்தார்களா இல்லையா?

3. முதன்முதலில் புராடெஸ்டெண்ட் சர்ச் கட்டுவதற்கு லண்டன் மிஷனுக்கு நிலமளித்தவர் ஒரு சான்றோர் குலத்தவரே. சாணார்கள் அடிமை ஜாதியினர் என எழுதும் ‘ஆய்வுச் செம்மல்கள்’ அடிமை ஜாதியினர் நிலம் வைத்துக்கொள்ளவோ, அதனைத் தானம் செய்யவோ உரிமை படைத்தவர்களாக இருந்தனர் என்பதற்கு உலக வரலாற்றில் ஒரே ஓர் உதாரணமாவது காட்டமுடியுமா?

4. அடிமை ஜாதியினராகச் சில ஆய்வுப் பெருந்தகைகளால் வருணிக்கப்படும் சான்றோர் குலத்தவர்களுள் பலர் முறைப்படியான மருத்துவம், வர்ம சிகிச்சை ஆகியவற்றிலும், களரிப் பயிற்சியிலும் தேர்ந்தவர்களாகவும் ஆசான்களாகவும் இருப்பதோடு, அத்துறைகளுக்குரிய ஓலைச்சுவடிகள் அவர்களின் வீடுகளில் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்படுவது எப்படி?

5. மிஷனரிமார்களின் வருகைக்கு முன்னர் சான்றோர் குலத்து நாடான்மார் பலர் நிலச்சுவாந்தார்களாக இருந்துள்ளனர் என்பதற்குத் திருவிதாங்கோடு அரச ஆவணங்களில் ஆதாரங்கள் உள்ளனவே. அது எப்படி?

6. ஐயா வைகுண்டர், புராடெஸ்டெண்ட் கிறிஸ்துவ சமயத் தத்துவத்தின் செல்வாக்கை உணர்ந்ததால்தான் அதனைக் ‘காப்பியடித்து’ உருவ வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார் என லண்டன் மிஷனரிமார் எழுதியுள்ளார்களே. சிதம்பரம், சிதாகாசம் என்ற பெயர்களில் நிலவும் ஆகாச வழிபாட்டினை இந்து சமயத்தில் அறிமுகப்படுத்தியவர்களே கிறிஸ்துவ மிஷனரிமார்தாமா?

இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக

எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன்
ஆகியோர் எழுதியுள்ள ஆய்வு நூல்

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்

ISBN: 978-81-910023-0-0
பக்கங்கள்: 192
விலை: ரூ. 100/-

வெளியீடு: தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை-44.
விவரங்களுக்கு: www.sishri.org
தொடர்புக்கு: info@sishri.org

Series Navigation

author

எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன்

எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன்

Similar Posts