தெரிந்துகொள்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

பவளமணி பிரகாசம்


தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று;
இதை அது என்றும், அதை இது என்றும்
தவறாக எண்ணியிருந்தேன் – இல்லை,
எது என்ன என்று எண்ணாமலிருந்தேன்,
கிழக்கே உதித்து, மேற்கே சாயுது
என்று நினைத்த சூரியன் பாவம்
ஓரிடத்தில் நிற்க நாந்தானே சுற்றுகிறேன்!
மாயாமயக்கமிது-மக்காய் மக்களை ஆக்குது,
மதியை வளர்த்து, மயக்கம் தீர
மனம் என்று விரும்புமோ ?
ஏன், எதற்கு, எப்படி என்று சாக்ரடாஸ் போல
அறிவை தீட்ட வேண்டாமோ ?
பிரபஞ்ச எல்லை வரை
சிந்தனை நீண்டிட வேண்டாமோ ?
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்