துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

கோ துக்காராம்


இரண்டு பேர் என் பக்கத்தில்
சிறுவன் ஒருவன்
‘வந்தாச்சா துவாக்குடி ‘
‘வரும் வரும்.. ‘
நான் சொல்ல இரண்டு பதில்கள் இருக்கின்றன
‘வெகு விரைவில் வந்துவிடும் ‘
‘வருவதற்கு நேரமாகும் ‘
இரண்டுமே சரியானவைதான்
பையனின் பார்வையில்
இரண்டுக்குமே வேறு பொருள்கள் இருக்கக்கூடும்

thukaram_g@yahoo.com

Series Navigation