This entry is in the series 20090915_Issue

கே ஆர் மணி


எப்படியோ நுழைந்துவிடுகிறது அது.
ஓவ்வொரு முறையும் ஓவ்வொரு வழியாய்.

வெட்டப்படாத நகமாய்,
அழிக்கப்படாத மின்னஞ்சலாய்
மறதிகள் பழக்கமாய்
யோசித்து திரும்பி வரும் ஞாபகத்திருப்பிகள்
தேய்ந்து போய்
திரும்பி பதில்தர வேண்டிய வேலைகள் உயரமாய்,
நன்றியும் ,நல்லாயிருக்கு என்கிற வார்த்தைகள்
மறந்து போயுமாய்,
இந்தக்கவிதையை முடிக்கவே
சோம்பலாய்..

தம சோமா.


mani@techopt.com

Series Navigation