சிறிய சிறகு

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

சத்யானந்தன்இந்தச் சிறிய வெள்ளை இறகு
என் தந்தையின் அறையில்
இருந்தது.

வீழ்ந்ததா வீழ்த்தப்
பட்டதா சிறு பறவையின்
சிறகா அல்லது பெரிய
பறவையின் உள்ளிறகா

பறவைகள் கூடு கட்டும்
பருவம் எது இடம் பெயரும்
தருணத் தடத் தேர்வில்
எது காரணியாகிறது

சீழ்கை அல்லது சிகுசிகுப்பு
பரிச்சயத் துவக்கமா இல்லை எதிர்
பார்ப்பின் தொடர் பரிமாற்றமா
பறவைகளை நான் புரிந்து கொள்ளவில்லை

பறவைகளுக்கு வெளிச்சம் பற்றிய
புரிதலில்தான் இருப்பு பறத்தல்

என் தந்தை இருந்த போது
இந்த இறகு பறவையின்
பாகமாய் இருந்திருக்கக் கூடும்

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்