சார்புநிலைக் கோட்பாடு

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

பசுபதி


ஐன்ஸ்டானின் பெரும்விசிறி ஆண்டாள்,
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு,
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னிரவு வீடுவந்து சேர்ந்தாள் !

****
ஐன்ஸ்டானின் சீடன்சொன்ன பேச்சு:
‘என்மறதி அதிகமாகிப் போச்சு!
. வாழ்வேகம் மிகவாகி,
. வருங்காலம் இறப்பாகி,
ஜனிக்குமுன்பே நான்எரிந் தாச்சு! ‘

****
(ஆதாரம்: இரு ஆங்கில லிமெரிக்குகள்.)

சார்புநிலைக் கோட்பாடு =Theory of Relativity;
சார்புவழி = relative way; மின் =ஒளி.
இறப்பு = இறந்த காலம்.
~*~o0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி