கனவு

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

ரா.கிரிஷ்


‘ பனித்துளிகள் மிதக்கும் புல்வெளியினூடே
கால்தடம் பதியாமல் என் பயணம்

‘ ஒரு ரோஜா தோட்டம் என்னை
கையசைத்து வழியனுப்பியது

‘ காடுகளை கடந்தேன்,
மலைகளை தாண்டினேன்
கடலில் மிதந்து சென்றேன்

‘ மேகங்கள் என்னை ஊடுருவி சென்றன
தொட்டு விடும் தூரத்தில்
நடசத்திரங்களும், நிலாவும்

‘ எனக்கு கீழே பறவைகள் பறந்து சென்றன
தடுப்பு சுவராய்
வானம் மட்டும் எனக்கு வழிவிடவில்லை

‘ வருத்தத்துடன் நிற்கையில்
சூரியனின் பார்வை
என் மேல் விழ தொடங்கியிருந்தது….

ரா.கிரிஷ்
sw_griesh@yahoo.com

Series Navigation

ரா.கிரிஷ்

ரா.கிரிஷ்

கனவு

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

ப்ரியன்


வனாந்திரத்தில் வனாந்திரமாய்
அலைந்தேன்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
திரியும் பாம்புகளைத் தவிர
வேறு ஜீவராசிகள் இல்லை
துணைக்கு!

சுற்றி சுற்றி வந்தாலும்
ஏதோ ஒன்று கொண்டு சேர்க்கிறது
துவங்கிய இடத்திலேயே!

குழம்பிப் போய்
மேல் பார்க்கையில்,
வானவில் வர்ணத்தில்
ஏதோ ஓர் பூ!

பெயர் தெரியா அப்பூவை
பறிக்க முற்படுகையில்;
பூ அலைகிறது
காற்றில் அசையும்
அருகம்புல் நுனி போல!

வெறி கொண்டவனாய்
எட்டிக் குதித்ததில்
கீழேயிருந்த புதைக்குழியில்
விழுந்து தொலைகிறேன்!

பகுதி குழியேறி
வெளி குதித்துவிட
எத்தனிக்கையில்
கால் இடறி
குழியில் இடுகின்றனர்
மீண்டும் மீண்டும்
யாரோ!

கட்ட கடைசியில்
கால் பிடித்தவனை
எட்டி உதைத்து,
கைக்கெட்டிய வேரைப் பிடித்து
வெளிப் பார்க்கையில்!

மெல்ல மெல்ல
இருளின் கண் மை
துடைத்து;
கண்ணாடி வழியே
படுக்கையறை நுழைகிறது
சூரியன்!!

—-
mailtoviki@gmail.com

Series Navigation

ப்ரியன்.

ப்ரியன்.

கனவு

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

சுப்ரமணியன் ரமேஷ்


பிரதிபளிப்பற்ற
ஸ்படிக விழிகளில்
மெளனித்து மூழ்குகிறேன்
ஆடைகளைத் துறந்து…
விண்மீன் வெளியிடை
தவித்து அலைந்த
பீனிக்ஸ் பறவை
விடுபட்டுக் கரையும்
உயிர்ப்பின் புன்னகை
விழிப்பு கொள்ள.

* * *

விலகிய திரை
செவிகள் உள் முயங்கி
அறிதுயில் கொள்ள
பார்வையின் துல்லியம் இதுவரை
விழிகள் அறியாதது
ஒரு மலர் எல்லையற்ற
கருணையுடன் பார்த்துக் கொண்டிருக்க
இரைச்சலின் உலகிற்கு மீண்டு
எழுந்து போனான்
காலடியில் மலர் மிதிபட்டதை அறியாமலே
இப்போதைக்கு இன்னமும் ஒரு முறை
கதவுகள் மூடிக் கொள்ள.

***
subramesh@hotmail.commi

Series Navigation

சுப்ரமணியன் ரமேஷ்

சுப்ரமணியன் ரமேஷ்