கடிதம் – ஆகஸ்ட் 5 , 2004

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சூர்யா


திண்ணை இதழில் வெளிவந்த இரு கட்டுரைகள் பற்றி

[1] ஆசாரகீனனின் வகாபி இயக்கம் பற்றிய கட்டுரை. இது உலகளாவிய இஸ்லாமிய தூய்மைவாத இயக்கத்தின் பேரழிவுத்தன்மையை அருமையாக சொல்லக்கூடிய கட்டுரை. ஆங்கிலத்தில் ஏராளமாக செய்திகள் கிடைத்தாலும் தமிழில் இன்றுவரை சொல்லும்படி எவருமே எதுவுமே எழுதியது இல்லை. காரணம் இஸ்லாமிய சமூகத்தில் உள்ள பொறுமையின்மை . விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு புனிதப்பேருருவமாக அவர்கள் தங்களைக் கருதிக் கொள்வது. இங்கே [ தமிழ் நாட்டில் ] பெரும் நிதியுதவியுடன் இவ்வியக்கம் இன்று வேரூன்றி விடது. பல நூற்றாண்டு பழக்கம் கொண்ட , மதநல்லிணக்கத்தின் சின்னங்களான தர்ஹாக்கள் இன்று அவமதிக்கப்படுகின்றன. வகாபிகளின் வசைமொழி தாங்கியே இங்கே எல்லா தர்காச்சுவர்களும் காணப்படுகின்றன. நாகூர் போன்ற தர்காக்களில் இந்துக்கள் வருவது மிக அதிகம். இப்படி போன பல இந்துக்கள் சமீபகாலமாக அவமதிக்கப்பட்டு துரத்தப் படுவது முக்கியமான செய்தி. சந்தனக்கூடு விழாக்களில் இந்துக்கள் கலந்துகொள்ளக் கூடாது என்ற தடை பல இடங்களில் கறாராக அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்துக்கோவில்களில் அலங்காரம் செய்யும் முஸ்லீம்கள் சாதிவிலக்கம் செய்யப்படுகிறார்கள். அதை பல செய்தி இதழ்கள் பலவகையில் வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பல ஊர்களில் இளைஞர்கள் குணங்குடியார், உமறுப்புலவர் போன்ற ஞானிகளின் நூல்களை வீடு வீடாகச்சென்று திரட்டி தீயிட்ட விழாக்கள் நடைபெற்றன. இஸ்லாமிய மணவிழாக்களில் பிற சமூகத்தினர் அழைக்கப்படுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் பல ஊர்களில் நடைமுறையில் உள்ளன[ நீங்கள் கடைசியாகச்சென்ற இஸ்லாமிய இல்ல நிகழ்ச்சி எது என யோசித்துபாருங்கள் முற்போக்கு நண்பர்களே. ] பர்தா எல்லா இஸ்லாமிய பெண்களுக்கும் எப்படி எவரால் கட்டாயமாக்கப்பட்டது ? மரைக்காயர்கள் பல நூற்றாண்டுகளாக பர்தா போடுவதில்லை, முட்டாக்கு மட்டும்தான். இதெல்லாம் ஒரு பெரிய ஒட்டுமொத்த இயக்கத்தின் வெளிப்பாடுகள் அதாவது இஸ்லாமிய மதத்தின் அரபு தேசிய / இன அடையாளம் முன்வைக்கப்பட்டு பிற தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் அடுத்தகட்ட வெளிப்பாடே இன்று கருப்பு முஸ்லீம்களை இனப்படுகொலை செய்யும் அரபு இனவெறியாக பல தேசங்களில் உருவாகியுள்ளது. இதையெல்லாம் புகைமூட்டத்தில் மறைத்து இஸ்லாமிய இன/ மத வாத வெறியை தங்கள் தற்காலிக அரசியல் லாபத்துக்குப்பயன்படுத்த நமது முற்போக்கு அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். கருத்து சுதந்திரம் பற்றி கூச்சல்போடும் நம் முற்போக்காளர் எவருமே இதையெல்லாம் எழுதவோ பேசவோ முடியாத நிலை இருப்பதைப்பற்றி வாயே திறப்பது இல்லை.

இதற்கு வந்த எதிர்வினைகளில் இருந்து தெரியும் விஷயம் இதுதான் :

1] நமது இஸ்லாமிய முற்போக்காளர்கள் ‘ மனிதாபிமானிகள் ‘ எவருமே வஹாபிசம் பற்றி சிறிய விமரிசனம் முன்வைக்கக்கூட அனுமதிப்பதில்லை .

2] அவர்கள் இந்துமதத்தை விமரிசிப்பார்கள். அவர்கள் மதத்தில் அதைவிட மூடத்தனமும் சாதிவெறியும் இனவெறியும் உள்ளதைப்பற்றி சொன்னால் ஆவேசப்பட்டு இஸ்லாமிய புனிதம் பற்றி பேசுவார்கள்.

3] இஸ்லாமிய வெறியை ஏற்றுக்கொள்ளாத அனைவருமே இந்துத்துவா வாதிகள் என்ற கோஷம் மட்டுமே இவர்களுடைய ஆயுதம்.

அ.மார்க்ஸின் நற்செய்திப்பணி பற்றிய சின்னக்கருப்பனின் கட்டுரை சிறப்பாக இருந்தது . ‘பெரியவர் ‘ பாக்கியமுத்து X ‘சங்கராச்சாரி ‘ , ‘மதவெறிவிஷம் ‘ X நற்செய்தி போன்ற சொல் களை எதிர் எதிராகப்போட்டு மார்க்ஸே தெளிவாக தன் மத/ சாதிய காழ்ப்பை அக்கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். அப்பட்டமான பொய்களை , திரிபுகளை மீள மீளச் சொல்வதனால் எல்லாம் சரியாகிவிடும் என நம்புகிறார் மார்க்ஸ். அதற்குப்பின்னால் அவருக்கு உதவ , மேடை தர பல அமைப்புகள் உள்ளன.

சூர்யா

—-

suurayaa@rediffmail.com

Series Navigation

சூர்யா

சூர்யா