ஓயாத கடலொன்று..

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

அமைதிச்சாரல்வீட்டை நிறைக்கும்
மழலைப்புன்னகையென
சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே,
கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய்
ஓடிச்சென்று மறைகின்றன
கொழுத்த நண்டுகள்..
ஆதரவான தகப்பனைப்போல்
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;
கொண்டு வந்து சேர்க்கிறது
கடலின் வாசத்தை..
இன்னொரு நாளை
முடித்த நிறைவில்
நாள் முழுதும் உழைத்த களைப்பில்;
மறைந்த ஆதவன்,
உதிக்கிறான் ஒரு குழந்தையின் கையில்
பலூனாய்..
வீடு வந்து சேர்ந்தபின்னும்
அலையடித்துக்கொண்டிருக்கிறது
கடல்,
உடையிலிருந்து உதிரும்
குறுமணலுடன்..
கால் நனைக்கவென்று மட்டுமல்லாமல்
எல்லாவற்றுக்குமான விருப்பமாய்…

Series Navigation

அமைதிச்சாரல்

அமைதிச்சாரல்