எங்கே அவள்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

மலர்வனம்


எங்கெல்லாம் தேடுவது
என்னவளை ? காலைப் பொழுதில்
அவளைத் தேடினேன்
அவள் இனிய குளிர்காற்று அல்லவா!

காலை சூரியனை
நோக்கித் தேடினேன்….
அவள் ஒளி வீசும் சுடர் அல்லவா!

கொடிக்கிடையில்
அவளைத் தேடினேன்…….
அவள் மணம் வீசும் மலரல்லவா!

என் டைரியில்
அவளைத் தேடினேன்…..
என்னுள் வடித்து வைத்தக்
கவிதை அவள் அல்லவா!

மரங்களுக்கிடையே
அவளைத் தேடினேன்……..
அவள் பாடும் குயில் அல்லவா!

தண்ணீருக்கிடையே
அவளைத் தேடினேன்…..
அவள் விழி மீன் அல்லவா!

வானத்தில்
அவளைத் தேடினேன்……
அவள் நிலவல்லவா!

உன்னுள்ளே இருக்கிறேன் மடையனே
என குரல் கேட்டு என்னுள் பார்த்தேன்….

என் மனதுக்குள்ளே இருந்து
கள்ளி உடனே சிரித்துவிட்டாள்!

malar_vanam@sify.com

Series Navigation

மலர்வனம்

மலர்வனம்