எங்கிருந்து வருகிறது ?

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

பிரியா ஆர்.சி.


காற்றின் வேகமாய் சீறும் கோபம்
அதை விட வேகமாய் புறப்படும் கண்ணீர்

பூக்கள் வெட்கும் மந்திரப் புன்னகை
அதையும் அழிக்கும் வெள்ளமாய் வெறுப்பு

அறிவை ஏமாற்றி ஏமாறும் ஆசைகள்
ஆசை அகற்றும் அஸ்திரமாய் அமைதி

மறைந்திருக்கும் மனதிலிருந்து
மறக்காமல் ஊற்றெடுக்கும் உணர்ச்சிகள்

உருத்தெரியாத உயிரிடமிருந்து
உறக்கத்திலும் விழித்திருக்கும் உணர்வுகள்

இவை அனைத்தும் இயற்கையின் அதிசயங்களா ?
இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களா ?

கவர்ந்திழுக்கும் தேடல்கள் ஒருபுறம் இருந்தாலும்
கவனிப்பிற்கு காத்திருக்கும் தேவைகளுக்கு
முதலிடம் தந்து விரைகின்றேன்!

rcpriya@yahoo.com

Series Navigation

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...