ஊடகம்

This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

சிவசங்கரன்


சாத்திரம் படைக்கும் கைகள்
பாத்திரம் துலக்க பலவழி
பாயாசம் மணக்க
பாதாம் அல்வா கிளற
பல குறிப்போடு
மகளிர் பக்கம் …

நடிகைகள் நடுபக்கத்தை
நாடே ரசிக்க
எங்களின் நடுப்பக்கம் ..

ஜிலுஜிலு இளசுகளின்
குளுகுளு படத்திற்கு
இளமை காம்பெளண்ட் ..

கடந்த வாரமே காட்டிவிட்ட
மும்தாஜை
மீண்டும் காட்ட
கும்மென்று இருப்பதாய்
வாசகர் கடிதம் ..

நாச்சொல்ல கூசும்
நாராசம் எழுதி நாறடிக்க
நடிகையின் கதை …

முத்தம் பற்றிய
மொத்த ஆராய்ச்சி …
கலவியின்பம் ..
கொலம்பிய குரங்குகள்
குட்டி போடும் விதம் …
மேதாவிலாசங்களுக்கு
ஹாய் சுதன் பதில்கள் ..

காவியோ தாடியோ போலியோ
மனதை அடக்கி
வாழ்க்கை வெல்ல தரும்
முத்தான மூன்று வழிகள் …

அந்தரங்க ரகசியங்கள்
ஆயிரம் பேர் விருந்தாக்க
ஆந்தையார் காக்கையார் பக்கம் ..

எதிலும் சேராமல் போனால்
இருக்கவே இருக்கு
இது உங்கள் இடம் …

யூகம் சரி தான் ……
நாங்கள் நடத்துவது
குடும்ப பத்திரிக்கை !!!

***

Series Navigation