உருண்டோடும்

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

செண்பக ஜெகதீசன்


உலகப்பந்து
உருண்டு கொண்டேயிருக்குது,
அதன்
முதுகில் அமர்ந்து
விதவிதமாய்
உரிமை கொண்டாடிய
பெரிய சிறிய மனிதரெல்லாம்
இருக்குமிடம் தெரியாமல்
உருத்தெரியாமல்..
போயே போயாச்சு,
அகிலமெல்லாம் தனதென்றவன்..
ஆளைக் காணோம் !

ஆனால்,
பூமிப் பந்து மட்டும்
போய்க் கொண்டிருக்குது
பயணம்-
பாதிப்பு ஏதுமின்றி,
அதன்
பாதம் பட்டயிடம்
மாதங்களாகி நாட்களாகி
மணித்துளிகளாகி பின்
மறைந்து
பிறந்தது புதிய ஆண்டு !

உலகப் பந்து
அது,
உருண்டு கொண்டேதானிருக்கும் !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்