இன்று

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

நட்சத்திரவாசி


காலையிலோ
மாலையிலோ
நினைத்து கொள்ளும்
பொருட்டாவது
வந்தமரும் பறவை
சூரியனோடு
போயிற்று
இன்றினை
எடுத்துக்கொண்டு
*
நீரருவி

பெரும் பாறையோ
சிறுகுன்றோ
மெல்ல வீழும்
நீரின் ஆராவாரம்
கேட்காமலா
நின்றபடி நிற்க்கவும்
இருந்தபடி இருக்கவும்
இருக்குமிந்த மனம்
எதைச் சொல்லிதான்
ஆறுதல்படும்?

www.natchathravasi.wordpress.com

Series Navigation

இன்று…

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

செல்வராஜ் ஜெகதீசன்இன்று
சமையல் கியாஸ்
தீர்ந்து விட்டது.
இன்று
மார்கழி மாதக் குளிர்
சில்லிட்டு இருந்தது.
இன்று
சாலையில் பார்த்த
ஒருவன் இடதுகண் மூடிக்
கட்டுப்போட்டிருந்தது.
இன்று
(இதுவரை சிரிக்காத)
நண்பன் ஒருவனின்
இடைவிடாத சிரிப்பைக்
காண நேர்ந்தது.
இன்று
வந்த கடிதமொன்றில்
நண்பன் தன்
முதல் மனைவியின்
நினைவு நாள்
நாளை என்று
எழுதியிருந்தான்.
இன்று
எழுத முயன்ற
கவிதையில்
பெரிதும் சோகம்
கவிழ்ந்தது.
இன்று
இந்தக் கவிதை
தானே தன்னை
எழுதிக் கொண்டது.


Series Navigation