அழிவை அழி

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

பிரியா ஆர்.சி.


அழியும் உயிர்கள்
உயிரோடு அழியும்
நேற்றைய கனவுகளும் இன்றைய நம்பிக்கைகளும்

குற்றம் ஏதும் செய்யாமலே
தண்டிக்கப்படும் பல கோடி உயிர்கள்
குடிமக்களாய் பிறந்த ஒரே குற்றத்திர்க்காக

அனுமதியின்றி அபகரிக்கப்படும்
ஆயிரக்கணக்கான ஆனந்தங்கள்
அரை நாழிகைக்குள்

அழிவுதரும் அணுகுண்டுப் போர்களும்
சங்கடம் தரும் சண்டைகளும்
சாதிக்கப்போவது என்ன ?

அமைதியும் அன்பும் அன்னியமாய்ப் போகாமல்
நாளைய அகழாய்வின் அதிசயங்கள் ஆகாமல்
அகராதியில் மட்டுமே காணும் அச்சாகிப் போகாமல் காக்க
அரவனைப்போம் அமைதியை !!!

நாளைய சமுதாயத்திர்கு நாம் விட்டுச்செல்வது
பூங்காவாயிருக்கட்டும் புதைகுழிகளல்ல !!!

rcpriya@yahoo.com

Series Navigation

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...