புகாரி, கனடா
சந்தனப் பேழைகள்
சிந்தினவோ
சாயங்காலமாய்ப் பூத்ததுவோ ?
சிந்தையில் மணக்கும்
அவ்வேளைதனில்
சீட்டியடித்து நான் புறப்பட்டேன்
தந்தங்கள் இல்லா
யானைகளாய்
தரிசனம் தந்தன மாமலைகள்
சிந்துகள் பாடியே
அருவிமகள்
சித்திரம்போல் மண் மடிவீழ்ந்தாள்
0
வந்தனம் பாடிய
வண்டுகளோ
வந்த என் வரவை ஆதரிக்க…
எந்தவோர்ப் பூவினில்
ராஜவண்டு
எத்துணை சுகங்கள் அள்ளிடுமோ
அந்த நற்பூவின்
மனதினைப்போல்
ஆனந்தமாய் நான் நன்றியென்றேன்
வந்ததும் கண்களைத்
தேனமுதாய்
வருடியப் பசுமைகள் வாழ்கவென்றேன்
0
துள்ளித் துள்ளியோர்
மான்கன்று
தூரத்தில் ஓடிய அழகு சொர்க்கம்
அள்ளித் தெளித்தச்
சந்தனமாய்
அங்கோர் அழகுப் பூந்தோட்டம்
சொல்லிச் சிரித்திடக்
குரங்குகளோ
சொடுக்கிடும் பொழுதில் என் பழந்திருடி
தள்ளி நின்றவோர்
நெடுமரத்தின்
தனிந்த கிளையினிற் தாவினவே
O
சில்லென வீசியக்
குளிர்வாடை
சிலிர்த்திட வைத்தது என்னுயிரை
நில்லெனக் கூவிட
வேண்டும் வண்ணம்
நிலைத்துப் பொழிந்தது பனித்தூரல்
உள்ளமோ மகிழ்வின்
உச்சியிலே
உடலோ ஆடிட வாடையிலே
இல்லை இச்சுகத்துக்கு
ஈடுயிணை
இடிபடும் பட்டிணத் தெருக்களிலே
O
மன்மத அம்புகள்
எய்தவண்ணம்
மாலையும் இரவாய் மாறிவர
வண்ண நிலவோ
மலைமுகட்டில்
வந்து வனப்பாய் நின்றிருந்தாள்
இன்று ஏன்
புதிதாய் அம்புலிக்கு
இல்லாப் பொலிவு வந்ததென்றே
கண்ணிமை அசைக்க
நான்மறந்து
கண்ணுக்குள் ஏந்திக் களிப்படைந்தேன்
O
கண்களை மூடிட
கிடைத்ததங்கே
கனவினில் வருகிற தனியில்லம்
எண்ணும் போதே
மனம் சிலிர்க்கும்
இரவின் தனிமையில் என் வீட்டின்
முன்னும் பின்னும்
ஏதேதோ
முரட்டுக் காலடிச் சத்தங்கள்
கண்களைச் சுருக்கி
சன்னல்வழி
கண்டேன் ஓரிரு கரடிகளை
O
மெல்லப் புலர்ந்ததும்
அதிகாலை
மேனியிற் புதியதோர் மினுமினுப்பு
வெள்ளை வெள்ளையாய்ப்
புகைபோலே
முல்லையில் நெய்த குடில்வனப்பில்
பள்ளியறை என
முகிலினங்கள்
படுத்து உறங்கின மலைமுகட்டில்
அள்ள அள்ள
அவ்வழகெல்லாம்
அடிமனம் வரைக்கும் பாய்ந்தனவே
O
மெள்ளத் துள்ளிநான்
ஆடியோடி
மிதந்தேன் அருவியின் மடியினிலே
சொல்லி முடியாச்
சுகங்கோடி
சொர்க்க வெளியில் எனைத்தள்ளி
இல்லை இல்லை
நான் திரும்பவில்லை
எனக்கிம் மலையே யாவுமென
சொல்லி விடடா
ஊருக்கென
சொல்லின சுகங்கள் சுகங்களெங்கும் !
*
புகாரி, கனடா
buhari@rogers.com
- ஸ்தல புராணம்
- அழியா எழில்
- எல்லா சொகமும் இழக்கலாச்சு
- ஒலி.
- புகழ்ப் பறவை பிடித்த கதை
- தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*
- தெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- போலச் செய்தல் ?
- பாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்
- கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்
- குறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ
- அளபெடை
- புதுக்கவிதைகள்!
- நினைவுச்சின்னம்
- உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்
- வெறுக்கிறேன்
- தேனீர்க் கோப்பையிலான புயல்
- கண்ணே கலைமானே
- அரசியல் இருக்கைகள்
- வைரமுத்துக்களின் வானம்-2
- புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.
- கடிதங்கள்
- அவன் அவள் காதல்
- முல்லையூர் லிங்கம்
- விடியும்! நாவல் – (12)
- தாழம்பூ
- கண்ப்பதி பப்பா.. மோரியா!!
- அய்யனார் சாமி
- உலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்
- 125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்
- நெடுமாறன்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- வாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)
- குமரி உலா -1
- குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும்
- சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்
- இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!
- சொர்க்கம்
- நினைவினிலே நிறைந்தவள்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2