அன்பை விதை,வன்முறை புதை!

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

கவிமாமணி(யோகியார்)வேதம்


இதயத்தின் வாசல் திறந்துவிடேன்!-அங்கே
…இமயமாய் ‘அன்பை ‘நிறுத்திவிடேன்!
புதைகுழி ‘வன்முறை ‘மறந்துவிடேன்!-எதற்குப்
….புண்ணாய் உலகினைப் பொசுக்குகிறாய் ?

யாரோ உனக்கேயிவ் வன்முறையை-நெஞ்சில்
..யாண்டும் பதித்து மயக்கிநின்றால்,
காராம், பணமாம் சுகத்திற்காய்-நாட்டில்
. ..கறையைப் பரப்பிஏன் மகிழ்கின்றாய் ?

பாடும் குயிலின் ‘சிறகு ‘பிய்த்தால்,-இன்பப்
..பாட்டைஉன் நெஞ்சம் ரசித்திடுமோ ?
தேடும் உணவில்நீ நஞ்சுவைத்தால்,-உன்றன்
. ..தேகம் வளர்ந்து கொழித்திடுமோ ?

போதனை செய்யும் தலைவரெல்லாம்-உன்னைப்
. . .போர்செய்ய வைத்துத் ‘தான் ‘ பதுங்குகின்றார்!
சாதனை யாய்யிதை எண்ணுவையா ?-சொல் இது
…சரி-வழி என்று ‘சத்யம் ‘ பண்ணுவையா ?

எண்ணங்கள் யாவும் நில(வு)ஆனால்-உன்னுள்
..எப்போதும் நிம்மதி பொங்காதோ ?
திண்ணமாய் அன்பை இனிவிதைப்பாய்!-அடேய்!
. ..தீரமாய் ‘வன்முறை ‘ விடைகொடுப்பாய்!

Series Navigation

கவிமாமணி(யோகியார்)வேதம்

கவிமாமணி(யோகியார்)வேதம்