அகதி
இளந்திரையன்

காலம் நகர்வது
தெரியாமலே
கரைந்து போகிறது
உணர்வுகளால்
உறக்கம் தொலைந்து
போகிறது
அலைந்து அலைந்து
அதுவே
வாழ்வாகிப் போகிறது
உலகின்
கருணை என்
உள்ளம் அறியவில்லை
அதுவே விதியாகி
அலைவது வாழ்வாகி
இன்னும் நான்
உலகின் வீதிகளில்
அலையும் அகதியாய்
கருணை வேண்டி
காலம் நகர்வது
தெரியாமலே
கரைந்து போகிறது
Ssathya06@aol.com