திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041230_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்

மத்தளராயன் அதிகாரபூர்வ மார்க்சிஸ்ட் சானல் கைரளியில் செய்தி சொல்லும்போது நூற்றொண்ணு என்றார்கள். அடுத்த நாள் பத்திரிகையில் தொண்ணூற்றொன்பது. வயது மூன்று இலக்கமோ, இரட்டையோ, அகர்த்தலா தோழர் நிர்பன் சக்ரபொர்த்தி நிறைவாழ்வு வாழ்ந்து இந்த வாரம்…

பெரானகன்

ஜெயந்தி சங்கர் பெரானகன் என்றாலே 'கலந்த ரத்தம் ' என்று பொருள். மலாய் மொழியிலும் இந்தோனீசிய மொழியிலும் 'வாரிசுகள் ' என்ற பொருள்கூட வரும். ஆண் வாரிசுகள் 'பாபா ' என்றும் பெண் வாரிசுகள்…

சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி

சுகுமாரன் சூசன் சாண்டாக் நேற்று,28 டிசம்பர்2004 செவ்வாய்க்கிழமை நியூயார்க் மருத்துவமனையில் காலமானார். முப்பது ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடியவரை எழுபத்தியொன்றாம் வயதில் மரணம் முழுமையாகத் தின்று தீர்த்துவிட்டது. அயல்மொழி சிந்தனையாளர்களிலும் எழுத்தாளர்களிலும் என்னைக் கவர்ந்த சிலரில்…

சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் பேரா. அ.காபெருமாளின் நூலுக்கான முன்னுரையில் திரு.ஜெயமோகன் குறிப்பிட்டிருந்த நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் இன்றைக்கு காட்டுக்குள் இல்லை. ஆனால் இன்று அதனைக் காணும் எவர்க்கும் ஜெயமோகன் கூறத்தவறிய ஒரு மனச்சித்திரம் புலனாகலாம். அக்கோவிலுக்கு…

கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!

நாக.இளங்கோவன் வரலாறுகளிலும், வரலாற்றுக் கதைகளிலும் படித்திருந்த கடல்கோள் ஒன்றனை கண்ணெதிரில் கண்டுவிட்ட அதிர்வில் இருந்து தமிழ் தேசங்கள் விடுபட காலங்கள் ஆகும். இந்தப் பேரழிவைக் கண்டு இரங்கும் தனிமனிதர்களின் நெஞ்சங்கள் போற்றத்தக்கவை. அண்ணாமலை என்ற…

சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்

வரதன் இயற்கை தனது சீற்றத்தை எப்போதும் அதிரடியாக நடத்துவதில்லை. பல வேளைகளில் தப்பிப்பதற்கு வாய்ப்பைத் தாராளமாகத் தருகிறது. சுமத்ரா பகுதியில் உருவாகிய அழுத்தம், சுனமா-வாக இந்திய-இலங்கையத் தாக்குவதற்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது.…

இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2

இயான் புருமா (Ian Buruma) - மொழிபெயர்ப்பும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன் அப்படி ஓர் அமைப்பை அடைவது கடினமான செயல்தான். ஆனால், மத்திய கிழக்கில் மதசார்பற்ற அரசியல் என்பதன் பரிதாபகரமான வரலாற்றைக் கருதினால், அதற்கு…

கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி

செய்தி இந்தியாவின் அதிகார வர்க்கம் கடல் கொந்தளிப்புப் பற்றிய எச்சரிக்கை பற்றிய அலட்சியம் காட்டியதால், பெரும் மனித இழப்புகள் நிகழ்ந்தன. கார் நிகோபார் தீவுகளில் ஞாயிறு காலையில் பெரும் அலைகள் புகுந்த செய்தி, விமானப்…

அறிவிப்புகள்

கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!

மாயவரத்தான் ஒரு காலத்தில் தமிழ்ப் பத்திரிகையுலகில் 'காமிக்ஸ் ' புத்தகங்கள் கலக்கிக் கொண்டிருந்தன. முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என்று வெளிநாட்டு காமிக்ஸ் வீரர்களின் தமிழ் பதிப்பை சிறுவர் முதல் பெரியோர்…

திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது

அறிவிப்பு கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது இம்முறை திரு பத்மநாப ஐயருக்கு அளிக்கப்படுகின்றது. அவாின் தமிழ்த் தொண்டு…

கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ____ தெற்கு ஆசியாவின் கடற்கரை ஓரங்களில், 26-12-2004 அன்று நிகழ்ந்த கடல் கோளின் விளவான மனித ஓலங்களைப் பற்றி நாம் என்ன சொல்வது, மூழ்கிடல் ஆயிற்றே! என்பதைத்…

கடிதம் டிசம்பர் 30,2004

அருளடியான் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் சகோதரர்களுக்கு, இந்தியக் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப் பட்டப் பட்டோருக்கு நம் வருவாயில் இருந்து தாராளமாக நன்கொடை அளிப்போம். உடன் பணியாற்றும் வெளி…

துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!

அறிவிப்பு 26-12-2004 காலை சுமத்திரா தீவுக்கு அண்மையாக வங்காள விரிகுடாவில் தோற்றங்கொண்ட சுனாமி (வுளுருேயுஆஐ) எனப்பெயரிடப்பட்டுள்ள பூமியதிர்ச்சியும் கடற்கொந்தளிப்பும் தெற்கு மற்றும் தெற்கிழக்கு ஆசிய நாடுகளைக் கடுமையாகத் தாக்கி பலத்த சேதத்தினை விளைவித்துள்ளது என்பதனை…

ஒரு வேண்டுகோள்

அறிவிப்பு இயற்கைச் சீற்றத்தால் அளப்பரிய துயரடைந்துள்ள நமது சகோதர சகோதரிகளின் வாழ்வினை மீண்டும் மீட்டமைக்க இயற்கையினை மானுட இயற்கையால் வெற்றி கொள்ள பாரதத் தாயின் உதிரக் கண்ணீரைத் துடைத்திட தோள் கொடுங்கள். எந்த உதவியும்…

மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கடந்த திண்ணை இதழில் திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மற்றும் அம்மணி ராதாராமசாமி ஆகியோர் எழுதிய இரண்டு கடிதங்கள் வெளியாயிருந்தன. திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மார்க்ஸுக்கு டார்வின் எழுதிய கடிதத்தையும் இது குறித்து திரு.ப.அனந்த கிருஷ்ணன்…

கடிதம் டிசம்பர் 23,2004

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்: தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்து கொண்டவர் மார்க்ஸ்.எனவே தனது 'மூலதனத்தை ' டார்வினுக்கு சமர்பிக்கவும் செய்தார். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா காலக் குயவனின் மேளமிது! கோணிக் கைகள் வார்த்துள்ள கோளமிது! கடலில் மிதக்கும் கொட்டையிது! மையக் கனலில் வெடிக்கும் கொப்பரையில் கடல்மதிலை எழுப்பும் ஞாலமிது! முன்னுரை: ஐம்பெரும்…

விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி

எட் ஸ்டோட்டார்ட் இந்தியப் பெருங்கடலில் தோன்றிய ட்சுனாமி காட்டுவிலங்குகளைப் பாதிக்கவில்லை என்பது விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வல்லுனர்களிடம் வலுப்படுத்தியிருக்கிறது. 24000 பேர்களைக் கொன்ற ட்சுனாமி இலங்கையின் கடலோரத்தில் இருக்கும் வனவிலங்கு…

இலக்கிய கட்டுரைகள்

பத்மநாபஐயர்

யமுனா ராஜேந்திரன் (லண்டன் நிருபம் பத்திரிகையில் வெளிவந்தது) மனிதர்களின் அபரிமிதமான அன்பினாலும் உபசரிப்பினாலும் சில வேளைகளில் நமக்கு மூச்சு முட்டுவதுண்டு. குடும்ப விழாக்களிலும் நெருங்கிய நண்பர்களின் திருமணங்களிலும் இவ்வனுபவம் அடிக்கடி நேரும். நெரிசலை விட்டு…

விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்

மதியழகன் சுப்பையா வண்ணங்கள் பற்றி எப்பொழுதாவது சிந்தித்திருகிறோமா ? நமக்கு எத்தனை வண்ணங்களின் பெயர்கள் தெரியும் ? ஒவ்வொருவராய் எண்ணிக் கொள்வோம். இவ்வளவு குறைவான வண்ணங்களையா நாம் காண்கிறோம் ? வண்ணங்களுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு…

‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II

லலிதா ராம் 'இந்த தடவை முத்ரா-ல ஃப்ரீ கச்சேரி இல்லையாமே ? ஆஸ்தீக சமாஜத்துல கூட 15-ரூபாய்க்கு டிக்கெட்டாம் ? '. மாமா talk-இல் பிரதானமாய் அடிபடும் டாபிக் இதுதான். (மாமி talk-இல் இந்த…

தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1

ஸ்ரீராமச்சந்திரன் ரவீந்திரன் பகுதி - 1 தெற்காசிய செவ்வியல் புராணங்களை(classical epics) நோக்கும்போது அவை இத்துணைகண்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வாறு மாற்றி அமைக்கப்படுகின்றன என்பது அவசியமாகிறது. இன்றைய சமூக அரசியல் பொருளாதார…

சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்

ஜெயமோகன் இவ்வருடத்திற்குரிய சாகித்ய அக்காதமி விருது தமிழில் ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியப் பரிசுகளை 'யாரோ ஒருவருக்கு யாரோ சிலர் கொஞ்சம் ரூபாய் கொடுக்கிறார்கள், நல்ல காரியம் ' என்ற அளவுக்கு மட்டுமே புரிந்துவைத்துள்ள…

சங்கீதமும் வித்வான்களும்

எஸ்.கே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் ( 'சுப்புடு ' அவர்களுடன் கூட) நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும் காதைப் பெற்றதே பெரும்பேறு என்று எண்ணி…

மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை

அ கா பெருமாள் வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது.…

மெய்மையின் மயக்கம்-32

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) ஜெய மோகனின் தீவிரம் மார்க்சியம் 'காலாவதி ' ஆகி விட்டது என்று ஜெய மோகன் கூறுகிறார். ஜெய மோகன் கூறினால் அது…

ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்

மோனிகா ஜார்ஜ் கிராஸ்சை புரிந்துகொள்ள அவரது ஆளுமையை கட்டமைத்த வரலாற்றுச்சூழலை புரிந்து கொள்வது இன்றியமையாதது. 1919 லிருந்து 1933 வரையிலான ஜெர்மன் வரலாற்றினை வெய்மர் குடியரசு என்று கூறலாம். வெய்மர் என்னும் ஜெர்மானிய நகரமே…

ரெஜி

யமுனா ராஜேந்திரன் ரெஜி சிறிவர்த்தனா தனது எண்பத்து இரண்டாம் வயதில் டிசம்பர் 14 ஆம் திகதி செவ்வாயக்கிழமை கிழமை கொழும்பில் மரணமுற்றிருக்கிறார். ரெஜி சிறிவர்த்தனாவை ஒரு எழுத்தாளர் என்ற வகையிலேயே அறிந்திருக்கிற ஒருவர் அவர்…

கதைகள்

அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்

ஜெயமோகன் திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ' ' இறைமறுப்பாளர்களின் கருவி '…

நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52

நாகரத்தினம் கிருஷ்ணா பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர் வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல் துன்னி வளைத்தநம் தோன்றற்குப் பாசறை தோன்றுங் கொலோ மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. -(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்…

கவிதைகள்

இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?

கவியோகி வேதம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்!..என்றுசொல்ல ஆசைதான்! மன்றில்உம்முன் அலட்சியமாய் வார்த்தைகளாய்ப் பசப்பிவிட்டு, .. செகம்புரட்டும் சித்தரென வந்தவன் இல்லையேநான்! குகையில் இருளிருக்கக் கூவுசதுர் வேதமாநான் ? .. ஆயிரம் கொலைசெய்தே 'அப்பு 'றம் சிரிப்பேனோ…

சுனாமி

திருமாவளவன் பேரிருளில் மூடுண்டு கிடக்கிறேன் காற்றின் திசையெல்லாம் ஒப்பாரி தொண்டைக்குள் சிக்குண்டு போயிற்று வார்த்தைகள் அச்சத்தில் உறைந்து இறுகிப் போயிற்று விழிகள் பெரு மலையை என் நெஞ்சுக் குழிக்குள் திணித்த துயரை எப்படிச் சொல்வேன்…

சுனாமி

ரஜித் சாது மிரண்டது கொலைக் கரங்களாகின அலைக் கரங்கள் காக்கை குருவிகள் கூடு கட்டிய நெடிய மரங்களெல்லாம் நெடுஞ்சாண் கிடையாக கும்மியாடிய குப்பங்க ளெல்லாம குப்பைக் கழிவாக கரை கண்ட இட மெல்லாம் மனிதக்…

கடற்கோள்

வ.ஐ.ச.ஜெயபாலன் எவரிடம் சொல்லி அழ தெய்வமே ஏதிலி உறவுகள் ஈழக் கரையிலே வேருடன் சாய்ந்தனரே போருக்குத் தப்பியவர் - அங்கு பொல்லாத வெள்ளப் பெருக்கில் பிழைத்தவர் ஊருடன் போயினரே உன்மத்தம் கொண்ட பேய் அலை…

ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்

எஸ். ஷங்கரநாராயணன் ---- முன்னுரை கவிஞன் என்பவன் லுாசுப்பயல். புகைப்படம் எடுக்கையில் எல்லாவனும் தன் நினைவாத் திரிவான்... பவுடர் சப் சப்னு ஓர் அப்பல். ஒரு டை இருந்தாத் தேவலையோ. தலைல முடிகிடி எதும்…

கவிக்கட்டு 42

சத்தி சக்திதாசன் என் உடன்பிறப்புக்கள் உயிரிழந்து , உறவிழந்து , உடமைகளிழந்து சோகச்சுமையினுள் அமிழ்ந்திருக்கும் வேளையில் இந்தக் கவிக்கட்டினை அந்த உயரிய உள்ளங்களுக்கு காணிக்கையாக்குகிறேன். கடலுக்கென்ன கோபம் ? கடலோடு பிறந்தீரே கடலோடு வளர்ந்தீரே…

பெரியபுராணம் – 24

- பா.சத்தியமோகன் [ அமர்நீதி நாயனார் :- சோழ நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி நாயனார். அவர் திருநல்லூரை விரும்பி அவ்வூரில் தங்கியிருக்கலானார். அவ்வூரில் ஒரு மடத்தையும் ஏற்படுத்தினார்.…

தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)

தமிழில் : நாகூர் ரூமி எப்போதுமே நான் படுகொலை செய்யப்பட்ட ஊரிலேயே இருக்கிறேன் என் கனவில். அதன் பெயர் வரைபடங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. சாலைப் பெயர்ப்பலகைகள் கிடையாது அதற்கு. தவறான ஒரு திருப்பம்தான் என்னை அங்கே…

கடற்கோள்

திருமாவளவன் ஊமை அமுக்கம் மிரள மிரள விழித்தபடி பயந்தொடுங்கிய மிருகத்தின் விழிகளோடு அடங்கியிருக்கிறது கடல் ஒரு பெரிய இரையை விழுங்கி செரிக்கும் வரையில் காத்திருக்கும் மலைப் பாம்பின் மெல்லிய உடலசைவு கடலின் மேற்பரப்பில் எத்தனை…

அழுகிறபோது எழுதமுடியுமா ?

பிச்சினிக்காடு இளங்கோ அழுகிறபோது எழுதமுடியுமா ? அழுத கண்ணீர் அழிக்கிறது எழுத்தை! எழுவது எப்போது ? ஏங்கித் தவிக்கையில் எழுதுவ தென்பது இப்போதைக்கில்லை அழுவது மட்டுமே ஆறுதலானது அழுவதொன்றே அனவர்க்குமானது கடற்கரை எல்லாம் மயான…

நகைச்சுவை

உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!

பாலா அன்பு நண்பா, நலம், நலமறிய அவா. சென்ற வருடம், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின், நாம் படித்த கோவை GCT கல்லூரிக்கு பணி புரியும் நிறுவனத்திற்கு இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிமித்தம் (Campus…