திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040902_Issue

அரசியலும் சமூகமும்

மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்

சோதிப் பிரகாசம் காலச் சுவடு இதழில் எஸ். வி. இராஜ துரை எழுதி இருந்த கட்டுரைக்கு எதிரான தமது கருத்துகளைத் 'திண்ணை ', 28-8-2004 இதழில் திருமதி மஞ்சுளா நவநீதன் வெளிப் படுத்தி இருக்கிறார்.…

இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ

சின்னக்கருப்பன் *** தலைவர் கலைஞர் அவர்களது கேள்வி பதிலிலிருந்து. செய்தியாளர்: மணி சங்கர் அய்யரின் உருவப்பொம்மை மீது செருப்பால் அடிக்கும் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற பேரவைத்தலைவர் போன்றவர்களே கலந்து கொள்வதைப் பற்றி. கலைஞர்: அந்தப்…

குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்

மயிலாடுதுறை சிவா நமது குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் கடந்த வாரம் தமிழகம் வந்து இருந்து, கொடிய தீ விபத்தில் பலியான கும்பகோணம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு…

மாறிவரும் ராஷ்டிரபதி பவன்

கே கோவிந்தராஜன் பொதுவாக கடந்த பல ஜனாதிபதிகள், வெறும் பொம்மைகளாக, அதுவும் நீண்ட அங்கியுடன் ஊதிப்போன பொம்மைகளாகத் தான் பார்த்திருக்கிறோம். கொட்டாவி விடக் கூட வாய்திறக்காத ஜடங்களும் அதில் உண்டு. மெடல் குத்துதல், அந்த…

கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்

அருளடியான் தமிழ் நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த பொியார் தனிநபர் வழிபாட்டை ஒருபோதும் ஆதாிக்கவில்லை. பொியார் மேடையில் பேசும் போது, எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டும்,…

அறிவிப்புகள்

கடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…

தாஜ் பாசிக்கிணற்றுத் தவளைகளின் பாதாளக் குரலை ஒன்றுமில்லை என்றாக்கும் குட்டைத் தவளைகளின் சகதி சப்தம் கும்பிக் குளத்துத் தவளைகள் கெக்கலிக்கத் துவங்க ஏனைய சப்தமும் விண்ணை முட்டும் ஊர் அடங்கும் நிசப்த வெளியில் சமதளவாசிகளை…

கடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே!

பிறைநதிபுரத்தான் இந்தியர்களால் சாதிக்க முடியாததை இத்தாலிய பாஹூ சோனியா சாதித்து விட்டார் - உருட்டுக்கட்டை மற்றும் சூலம் சகிதமாக உலா வந்தவர்களை ஒரு சில நாட்களுக்காவது 'தேசியக்கொடியை ' பிடிக்க செய்துவிட்டார்! காவிக்கொடிக்கு மட்டும்…

கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்

அருளடியான் சன் டிவி, தன்னிடம் நாடகத் தொடர் கொடுக்கும் நிகழ்ச்சித் தயாாிப்பாளர் பிற தனியார் டிவிகளில் தொடர் செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கின்றனர். சமீபத்திய உதாரணம், நடிகை குஷ்பு ஜெயா டிவியில் 'கல்கி…

கடிதம் செப்டம்பர் 2, 2004

பிறைநதிபுரத்தான் திண்ணை வாசகர்களுக்கு, தாங்கள் சொல்வது மட்டும்தான் உண்மை, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் எழுதும் காவி கோமாளிகளுக்கு பதிலடி கொடுப்பதில் எவ்வளவு நேரத்தை வீணடித்தாலும் - அதிலே ஒரு அலாதியான இன்பம்…

கடிதம் செப்டம்பர் 2, 2004

தம்மாம் பைசல் சாவர்க்கரின் சாயம் வெளுத்தது ஆகஸ்டு 10 (2003) குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டம் பரபரப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய மாவீரர்களை அழைத்து விருந்தளித்து அவர்களை கெளரவப் படுத்தினார் குடியரசுத் தலைவர்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூச்சிகளின் சுய மருத்துவம்

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான் பூச்சிகள் சுகவீனம் அடைந்தால் என்ன செய்யும் ? இதுதான் கேள்வி ? இதற்கு விடை தேடும் முன், ஒரு பூச்சி சராசரியாக எவ்வளவு நாட்கள் வாழும் என்பது தொிந்தால், நமக்கு…

சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் தண்ணீர் இன்றேல் வாழ்தளம் நரகமே! நீர்மயம், நீர்மயம் எப்புறமே! இருந்தும் ஓர்துளி நீரில்லை, நீரில்லை உட்கொளவே! உப்புநீர், உப்புநீர் உலகெங்கும்…

இலக்கிய கட்டுரைகள்

பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை

அருளடியான் பொற்கோ என்ற டாக்டர் பொன். கோதண்டராமன் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர். இவர் தனது 'திருக்குறள் உரை விளக்கம் ' நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அறத்துப்பாலுக்கு ஒரு தொகுதி, பொருட்பாலுக்கு இரு தொகுதிகள்,…

சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்

இகாரஸ் பிரகாஷ் முன்னுரை ---- சுந்தர.ராமசாமி அவர்களின் எழுத்துக்களை, அதன் கருத்து மதிப்பை விட, அதில் இழையோடும் நகைச்சுவைக்காகவும் அதன் எளிமைக்காகவும் தான் அதிகமாக விரும்பி வாசிக்கிறேன், என்றால், சுந்தர.ராமசாமியை, வேறு தளத்தில் வைத்து…

சாகர புஷ்பங்கள்

என் எஸ் நடேசன் சமீபத்தில் நடந்த ஒரு சிறு சம்பவம் மனத்தில் பதிந்திருந்த பல சம்பவங்களை திரும்பிப் பார்க்க வைத்தது, புலம்பெயர்ந்தவர்களிடம் இருக்கும் பொதுத்தன்மை இந்த நொஸ்ரல்ஜீக்கான இயல்பாகும். எஸ்.போவின் பாணியில் இது நனவிடைதோய்தலாகும்.…

மெய்மையின் மயக்கம்-15

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) பிழை பட முடியாத ஞானம் கோவை ஞானியின் 'மார்க்சிய அழகியலை ' மீண்டும் ஒரு முறை நாம் நோக்குவோம்; அதில் செயல்…

கதைகள்

யேசுமாதா போன்ற முகம்

அ.முத்துலிங்கம் அவன் வாழ்க்கையின் மிகவும் அடிப் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு சமயம் தன்னுடைய பெயரை வேலை ஏஜன்ஸ’ ஒன்றில் பதிந்து வைத்திருந்தான். இந்த நிறுவனத்துக்கு ரொறொன்ரோ மருத்துவமனைகளுடன் ஒரு தொடர்பு இருந்தது. அவர்கள் தங்களுக்கு,…

தவறாக ஒரு அடையாளம்

மாலதி---- காலால் ஒரு உதை.பெருவிரலால் ஒரு நெம்பு. கதவு தடாலென்று விழுந்தது.இந்த சாவி ஸுட்கேசோடு தொலைந்து போகாமல் இருந்திருந்தால் கதவை இப்படித் திறந்திருக்க வேண்டாம். எதிர் ப்fளாட் மிஸஸ் ஜகாரியா அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள். பார்த்து…

பதவி உயர்வு

ரம்யா நாகேஸ்வரன் குழந்தை தீபிகாவின் உடல் அனலாக கொதித்தது. இருமல், சளியோடு ஆரம்பித்த பிரச்சனை இப்பொழுது ஜுரத்தில் முடிந்திருக்கிறது. குமரனின் அலுவலகத்திற்கு போன் செய்தாள் கீதா. “குழந்தைக்கு ரொம்ப ஜுரம் அடிக்கிறதுங்க. பக்கத்து வீட்டு…

எங்க ஊரு காதல பத்தி…

அ. முஹம்மது இஸ்மாயில். அஸ்லம் இப்போது விமான நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறான். இன்று அவன் அவனது தந்தையுடன் இந்தியாவிற்கு பயணம் செய்ய இருக்கிறான். அவன் இந்த வெளிநாட்டிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது.…

மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ

மாதங்கி 'நீ என்னதான் சொல்லு ரகு, அவனவனுக்கு வீட்டு வேலைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை; ஆபீஸ் விட்டு வீடு வர ஒன்பதாகிறது, அதன் பின், குளித்து, சாப்பிட்டு, ஏதோ பத்து நிமிஷம் தொலைக்காட்சி பார்க்கலாம்…

தோல்விக்குப்பின்

சுஜாதா சோமசுந்தரம் அலைகள் முத்தமிட்டு தண்ணீர் கோர்த்த தரையில் காலடிகளை பதித்து நடந்த ஹாசனின் பார்வை எதிலுமே நிலைத்து நிற்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது.அவனுடைய உடம்பில் சொல்ல முடியாத அளவுக்கு சோகம் தொற்றியிருந்தது.நடையில் இருந்த கம்பீரமும்,நம்பிக்கையும்…

ஊருப்பொண்ணு

சுஜாதா சோமசுந்தரம் மெத்தையில் புரண்டு புரண்டு படுக்கிறேன்.இமைகள் இணைய மறுக்கின்றன.புதிய வீட்டின் சூழலா ? மனிதனின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அடைந்துவிட்ட திருப்தியா ? ஒரு வீட்டுக்கு அதிபதி என்ற பூரிப்பா ?நீண்ட நாட்களுக்கு…

கவிதைகள்

அன்புடன் இதயம் – 30

புகாரி (நிறைவடைகிறது) விரல்கள் விரித்து விரல்கள் கோத்து விலகா உறவாய் அன்பே நீயென் உடன் வருவாயா என் கையளவே நிறைந்த உன் சந்தோசங்களையும் உன் கையளவே நிறைந்த என் சந்தோசங்களையும் இணைத்த சந்தோசத்தில் முளைத்த…

வலை

நெப்போலியன் சிலந்திக்கு வீடு மீன்களுக்குச் சிறை. வேடனின் முதல் வேட்டையின் பரமபதம். பிடிப்பதால் பொறி தடுப்பதால் மறி. வலையினைத் தொழிலாய் வீசுபவன் உழைப்பாளி. வலைகளைத் துரோகமாய் விரிப்பவன் கொலையாளி. வலைதனைப் பின்னுபவர்களும் வலைக்குத் தப்புவதில்லை...…

பெரியபுராணம் – 7

பா.சத்தியமோகன் 76. குவிந்த நெற்குவைகள் அரசுக்கு றில் ஒருபங்கு செலுத்தின அறங்கள்செய்தன தெய்வத்தைப்போற்றி தென்புலத்தாரையும் விருந்தினரையும் ஓம்பின சுற்றத்தார் சொந்தங்கள் குடிகள் ஓங்கின மலைபோன்ற மாடங்கள் மலர்ந்துள்ளன 77. உழவர் கரும்பைக்காய்ச்சுவதால் எழும்லைப்புகை- மங்கையர்…

நூல் வெளீயிடு

வீரமணி இளங்கோவன் நீங்கள் வெளியிட்ட நூல்களில் விலைபோகிறீர்கள் உங்கள் வெளியீடு காணாத நூல்களே விலைமதிப்பற்றவை துரதிஷ்டவசமாய்... உங்கள் நூல்களை எடைபோடும் தராசுகள் உங்களையும் அமரவைத்தே அவற்றை எடைபோடுகின்றன நீங்கள் இலகுவானவராய் இருக்கிறபட்சத்தில் உங்கள் கனமான…

வேறுபாடு….!

தேவன்மலர் அவள்....! வேலைவிட்டு வீடுவந்தாள் வீடெல்லாம் குப்பை கூளம் கூட்டிப் பெருக்கி நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது சமையல் வேலை....! குழந்தைகளை சாப்பிடச் செய்து அலுப்புதீரக் குளித்துவிட்டு அயர்வோடு படுத்தபோது.... அருகினில்.... ஆசையுடன் கணவன்! இவள்....1 ஆசைமகன்…

கவிக்கட்டு 23

சத்தி சக்திதாசன் நீ நிஜமா ? நிழலே ! நான் நடந்தபோது நீயும் நடந்தாய் நான் நின்றபோது நீயும் நின்றாய் நிழலே நீ நிஜமா ? நான் சிரித்தேன் உன் முகம் சிரிக்கவில்லை நான்…

…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)

- கி. சீராளன் மழைவிட்டு போயிடுச்சே மெட்ராஸு நாறிடுச்சே போட்ட குழாய் காத்தடிக்க கார்ப்பரேசன் முழிமுழிக்க மேகத்துல ஈரமில்ல தாகத்துக்கும் தண்ணியில்ல வீராணம் குழாபோட்டு கண்டலேறு தண்ணீவந்து குடமெல்லாம் நீர்நிரம்பி கொழாச் சண்டை தீருவதெப்போ…

உயிரிடம் ஒரு சந்தேகம்….

பட்டுக்கோட்டை தமிழ்மதி இந்த மத்தாப்புக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி ? ஓ... சுடர் நெருப்பை தொட்டிருப்பதாலா ? கத்தி ஏன் சாணைக்கல்லில் பூப்பூவாய் பூரிப்புகளோடு பொறிகளை தூவுகிறது ? ஓ... உரசல் என்கிற உறவில்…

வலை

நூர்ஜஹான் சுலைமான் நயந்து போகாத நரம்புகளால் பின்னப்பட்டு மீனைப் பிடிக்கவும் கொசுவை விரட்டவும் விறகப் படுகிற வலுவான வலைகளை விடவும் எச்சில் இழைகளால் பின்னப் படுகிற சிலந்தி வலைகளையே- நான் சிநேகமாய் நேசிக்கிறேன்... ஏனென்றால்,…

வலை

பனசை நடராஜன் காலம்... நம் வாழ்க்கை வழியெங்கும் கணக்கிலடங்கா வலைகளை விரித்து வைத்துக் காத்திருக்கும்...! கொள்ளை நோய், வெள்ளம், புயலென எல்லா வலைகளும் எதிர்பாராத இடங்களில்..! முன்னறிந்தும், எதிர்கொண்டும் நுண்ணறிவால் தப்பினாலும்.. புத்தி தடுமாறிப்…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்

சித்ரா ரமேஷ் நான் ஏற்கெனவே சொல்லியிருந்த மாதிரி உடையலங்காரம் கேபிசுந்தராம்பாளை ஒத்திருந்தாலும் ஒருத்தி மட்டும் ஷெரீன் ஸ்டைலில் வருவாள். எட்டாவது வரைக்கும் அவரவர் வளர்ச்சியைப் பொறுத்து முட்டிக்கு கீழ் வரை ஸ்கர்ட்,கொஞ்சம் உயரமாக வளர்ந்து…

சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு

சொதப்பப்பா 1983இல் நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும்போது அணுகுண்டு ஆயுதம் பரிசோதனை ஆயத்தம் செய்தோம். ஆனால் அப்போது (இந்திரா காந்தி) அரசாங்கம் பின் விளைவுகளுக்காகவும், பகிஷ்காரத்துக்காகவும், பொருளாதாரத்தடைகளுக்காகவும் பயந்துவிட்டது. இவர் (வாஜ்பாயி) தைரியத்துடனும், ஞானத்துடனும்…

கருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு

கோச்சா (எ) கோவிந் கலைஞர் கருணாநிதி, கவிப்பேரரசு, இசைவேந்தர் பரத்வாஜ், இந்த மூவேந்தர்கள் எந்த வெற்றிக்கு இப்படிப் புன்னகைப் பூக்கிறார்கள் தெரியுமா.... ? கலைஞர் - இசைவேந்தர் கூட்டணியின் பாடல் கேசட் வெளியீட்டு நிகழ்ச்சியில்…