திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040819_Issue

அரசியலும் சமூகமும்

மசாஜ்

ராமன் ராஜா எங்கள் அலுவலகத்தில் பாழாய்ப்போன ஜாவாவை எழுதி எழுதி அலுத்த இளைஞர்கள் பலரும் ஒன்று கூடி விவாதித்து, சலிப்புத்தீர எங்கேயாவது பிக்னிக் போவதாக முடிவாயிற்று. இணையத்தில் பல மணி நேர மேய்ச்சலுக்குப் பிறகு,…

மனித உரிமை ஆணையம்..!!!

கோச்சா ( எ ) கோவிந்த் ---- மனித உரிமைகள் நிலை நிறுத்துவது அனைவரின் தலையாய கடமை. அதற்கு மனித உரிமைகள் ஆணையம் நிச்சயத் தேவை ஆகும். அதே சமயம், கரூர், மேட்டு மகாதனபுரம்…

சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்

பாவண்ணன் 07.08.04 அன்று பெங்களூர் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமரர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலனுக்குக் கொடுக்கப்பட்டது. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் உழைத்து வருபவர்…

குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2

ஞாநி கும்பகோணத்தில் நடந்தது வெறும் தீ விபத்தல்ல. குழந்தைகள் படுகொலை. எப்படி போபால் விஷ வாயு கசிவில் கம்பெனி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கானோர் மடிந்தது வெறும் விபத்தில்லையோ அது போலவே கும்பகோணம் படுகொலைக்கும் அரசின்…

மரண தண்டனை எதற்காக ?

ஞாநி கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் அதற்குச் சொல்லும் காரணம் அப்போதுதான் குற்றவாளிகள் இனி குற்றம் செய்யாமல் இருப்பார்கள். அந்த தண்டனையைப் பார்த்து மற்றவர்களும் அத்தகைய குற்றத்தில்…

டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004

ஞாநி சினிமா உலகத்தைப் பல சமயங்களில் நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன் என்பதால் எனக்கு சினிமா பிடிக்காது என்று ஒரு சிலர் தப்பான கருத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு சினிமா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அரசியலும் அப்படியே.…

அறிவிப்புகள்

டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘

கோச்சா மனிதன் என்பவன் இறைவன் ஆகலாம் - தானம் தர்மம் செய்து. தான தர்மங்களில் தலையாயது, எழுத்தறிவித்தல். உள்ளூர் தாண்டி , வெளியூரிலும் வசிக்கும் தமிழர்கள் தங்களால் முடிந்ததை தான் சேர்ந்த ஊரில் உள்ள…

நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்

சுகுமாரன் பாப்லோ நெரூதா பற்றிய எனது கட்டுரைக்கு திரு.யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை கண்டேன். சற்று வருத்தமாகவும் இருந்தது. குறிப்பாக 'குறிப்பிட்ட உலகக் கவி ஒருவர் குறித்து தமிழில் நடந்திருக்கும் பங்களிப்புகளை ஒதுக்கி விட்டு தன்னை…

என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்

ஜெயமோகன் என்னுடைய அனைத்து சிறுகதைகளையும் உயிர்மை பதிப்பகம் நூலாகக் கொண்டுவருகிறது. சிறுகதைகள் ஒரு தொகுதியாகவும் குறுநாவல்கள் ஒரு தொகுதியாகவும் வெளிவருகின்றன. பொதுவாக நான் படைப்புகளை சேர்த்து கோப்புகள் செய்வதில் அக்கறை எடுப்பவனல்ல. அத்தகைய ஒழுங்கு…

காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி

திலகபாமா காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி ஜனவரி 2003 முதல் டிசம்பர் 2003 வரை உள்ள கவிதைத் தொகுப்புகள் 2 பிரதிகள் வரவேற்கப்…

‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை

ஜெ. ரஜினி ராம்கி மதிப்பிற்குரிய ஞாநிக்கு, புதிதாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து அரசியல் பணியையும் ஆற்ற தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இதை எப்போதோ எதிர்பார்த்திருந்தோம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் எப்போதும் குறைகளையே அடுக்கும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'நிலக்கரிப் பின்னல்கள் [Coal Synthetics] ஆக்கும் புதிய பொறித்துறையில் எழும் துர்வாயுக்கள் யாவும் நீக்கித் தவிர்க்கப் படும். இன்றேல் அவ்விஷ வாயுக்கள் புதிய எருக்களை உருவாக்க…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)

சோதிப் பிரகாசம் அரிஸ்ட்டாட்டில் அழகு என்றால் என்ன ? என்பதைப் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் நாம் முயன்று பார்த்தோம்; ஓர் அளவுக்கேனும் அதன் அடிப்படைகளை நாம் புரிந்து கொண்டும் இருக்கிறோம். எனினும், அழகின் கருத்தமைவிற்குத்…

அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)

பாவண்ணன் 'ஏழாம் உலகம் ' என்பதை எங்கோ இருக்கிற பாதாள உலகத்தைச் சுட்டுவதாக நம்பிக்கொண்டிருக்கிற மானுட குலத்துக்கு நாம் வாழும் எதார்த்த உலகின் இருட்டுப் பகுதிக்கிடையிலேயே அது பரந்து விரிந்திருப்பதை அடையாளம் காட்டுகிறது இந்த…

ஒரு துளியின் சுவை

பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் ஏறத்தாழ எட்டாண்டுகளுக்கும் மேலாக கர்நாடகத்தின் தென்கோடியிலிருந்து வடகோடிவரை உள்ள எல்லா மாவட்டங்களிலும் சிற்சில மாதங்கள் மாற்றிமாற்றி வேலை செய்தபோதுதான் நான் கன்னடம் கற்றுக்கொண்டேன். நான் பயிலும் கன்னடம் என்னுடைய தினசரித்…

சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1

அக்னிபுத்திரன் ஒரு இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அம்மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, அவர்களின் கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டுக்கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும். இவ்வகையில்…

கதைகள்

கிள்ளுப் பூ

சிவஸ்ரீ புந்து புந்துனு இருக்கிறப் புறாப் போல மொத்னு இருக்குது இந்த வாழப் பூவு. அதோட சிறக, ச்ச இல்ல மடலப் பிரிச்சவுடன அப்பப் பொறந்த பாப்பாவோட பிஞ்சு விரலாட்டம் சந்தன நிறத்துல கொப்பா…

மழை மழையாய்…

புதியமாதவி, மும்பை மழை நேரம்.. எப்படியும் மழைப்பற்றி ஒரு கவிதை எழுதிவிட வேண்டும். இது மழை நேரம்.. மண்மகளைத் தழுவவரும் மழை மேகம் .. மும்பையில் தவறாமல் வருகின்றதே.. வாக்குத்தவறாமல் வருகின்றதே.. இருக்கின்றது இன்னும்…

ரயில் பயணங்களில்

ஞானதேவன் இந்தியாவின் மற்ற பெரிய ஸ்டேசன்களை போலவே சென்னை சென்ட்ரல் அன்றும் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. மொத்த மக்கள் தொகையும் அங்கே வந்து குவிந்தது போல் அத்தனை தலைகள். அவற்றுக்கு நடு வே புகுந்து,…

எங்கே தவறு ?

சந்திரவதனா பறந்து வந்த சாப்பாட்டுக் கோப்பையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மதுமிதா குளிர்சாதனப் பெட்டிக்கும், மின்சார அடுப்புக்கும் இடையில் இருந்த இடைவெளிக்குள் புகுந்து குனிந்தாள். ஏழு மாதக் கர்ப்பிணியான அவளால் அந்தச் சிறிய இடைவெளிக்குள்…

பாதை மாறினால்….

சுஜாதா சோமசுந்தரம் அந்தி வானம் பூமியோடு வம்பு செய்துக்கொண்டிருந்த வேளை.மழையும்,காற்றும் தங்கள் திறமைகளை போட்டிப்போட்டு பூமியிடம் புலப்படுத்திக்கொண்டிருந்தது.நடன வகுப்பு முடிந்து வீடு திரும்பாத மகளுக்காக மனதில் பயத்தோடும்,மடியில் கனத்தோடும் காத்திருந்தாள் ராதா.கடிகாரத்தையும்,வாயிலையும் மாறி மாறி…

குரங்கிலிருந்து …

பத்ரிநாத் நயினாவோட மெய்யான பேரு இந்த ஏரியாக்காரங்க ஆருக்கும் தெரியாது. அல்லாரும் நயினா நயினான்னே கூப்புட்டு பளகிட்டாங்க . ஆனால் அவரு கஞ்சத்தனம் இருக்குதே ரொம்ப ஃபேமசு.. எவ்வளவு ஃபேமசுன்னா . ' 'அய்யே..…

நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33

நாகரத்தினம் கிருஷ்ணா மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. -மாணிக்கவாசகர் அதிர்ச்சிக்கும்…

கவிதைகள்

8க்குள் முன்னேற்றம் எட்டு !

நெப்போலியன் 1 உழைப்பின் உத்திரவாதம். 2 நம்பிக்கையின் முதல்படி. 3 வெற்றியின் நுழைவாயில். 4 வாழ்க்கையின் இலட்சியமுனை. 5 வியர்வையின் மற்றொரு பெயர். 6 திறமையின் தேர்வுச்சாலை. 7 தோல்வியின் படிப்பினைக்களம். 8 முயற்சியின்…

தோழி

பவளமணி பிரகாசம் என் பிரியமான தோழியே விபரம் தெரிந்த வயதிலே அறிமுகம் னவளே இன்று வரை என் முகம் பார்த்து நேசிப்பவளே மையிட்டு பொட்டு வைத்து அணிமணிகள் பூட்டிக் கொண்டு தலை நிறைய பூவை…

எனக்குள் காலம்

திலகபாமா முட்களை பார்த்துப் பார்த்து நாட்கள் முன் நகர்ந்து கொண்டிருந்தன. ஆறில் முட்கள் இருக்கையில் விடியலென்று சொல்லப் பட்டது எட்டில் முட்கள் இருக்கையில் இரவின் உண்ணா நோன்பை வயிறுகள் முடித்து விட நினைவு கூர்ந்தன…

வேண்டும் – வேண்டாம்

மோசி பாலன் மக்கள்: மண்பொன் மதம்நிறம் மாதுறவு கொண்டாட கண்கை தலைவாங்கும் தீயர்க்கும் - கண்டும் வெறுங்கை பிசைகின்ற வீணர்க்கும் வேண்டும் வெறுப்பை வெறுக்கும் உணர்வு அரசு அதிகாரி: மீசைக்கீழ் வாய்பேசி மேசைக்கீழ் கைநீட்டி…

மல மேல இருக்கும் சாத்தாவே!

ருத்ரா விக்கிலிங்கபுரத்திலெ இருந்து அம்பாந்த்ரத்துக்கு வந்துட்டா அங்ஙனெ இருந்து ஊர்க்காடு செல்லும் பாதேல தாம்ப்ரபரணிக் கரைக்கு வல்லாட்டு போட்டாப்ல கெடக்கும் சாலெ அது. பக்கத்துல மல மேல இருக்கும் சாத்தா பளிங்கு பாய் விரிச்சாப்ல…

பெரியபுராணம் — 5

பா சத்தியமோகன் 46. தேசமெல்லாம் விளக்கிய தெந்திசை ஈசர் உறையும் தோணிபுரம் எனும் சீகாழித்திசை பூசனைக்குப் பொருந்தும் திசை பேசப்போச தெற்குத் திசை ஒப்பற்ற ஓர்திசை. 47. ஆலால சுந்தரர் வந்தொண்டராகிய செய்கையை உபமன்னிய…

நிகழ்வின் ரகசியம்

பா.தேவேந்திரபூபதி காலமும் இடமும் தீர்மானிக்கின்றன நிகழ்வை இடம் தமதான போது காலம் இறக்கைகள் மூடி வாயிற்படிகளில் இரைதேடி அலையும் காலம் தாழ்பணிந்து கிடக்கையில் அகிலமே போதாத இடமாய் தோன்றக் கூடும் இரண்டும் சேரும் ஒரு…

அன்பு

சுஜாதா சோமசுந்தரம் அன்பு என்ற அர்த்தம் தேடினேன் அகராதியில் கிடைக்கவில்ல; பண்பு என்ற சொல்லுக்கு பகல் முழுவதும் யோசித்தேன் பைத்தியகாரி ஆகாமல் போனதுதான் மிச்சம்; தாயிடம் கிடைத்த அன்பு உலகத்தரம் வாய்ந்தது; தந்தையிடம் கிடைத்த…

எங்கள் கிராமத்து ஞானபீடம்

நா.முத்து நிலவன் காலை வணக்கத்தில் 'நேர் நில் ' சொல்லியும் நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று தர்மசக்கரத்தை மறைத்து தேசியக்கொடி தரை பார்க்க, மாணவர் ஊர்வலம் மரத்தடி வகுப்புக்கு மவுனமாய்ச் செல்லும். ஐந்து வகுப்பிலும் அறுபத்தேழு…

தனிமை வாசம்

பட்டுக்கோட்டை தமிழ்மதி பூத்திருக்கும் கொடி. நிழலிலே நிற்காமல் வெயிலிலே நிற்கும் மரம். மலை மேடேறி காலடிக்குக் கீழே காணும் மண். கனவைத் தொட கைகளாய் நீளும் மனம். மணக்கும் பூக்கள்... மகரந்தக் கவிதைகள்... ஈரம்…

நகைச்சுவை

கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:

வரதன் ஸ்டாலின்: ஈவ் டாஸிங் சட்டம் மூலம் பெண்களின் மேலான பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்கு ஸ்டாலின் மேயராக ஆற்றிய பணிகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு, 'பத்மசிரி ' பட்டம் வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு.…

ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘

சித்ரா ரமேஷ் 'ரோல்ட் டால் ' என்ற குழந்தை எழுத்தாளர் எழுதிய 'மெட்டில்டா ' கதையை படித்திருந்தால் எங்க ஸ்கூல் பற்றி விவரம் புரியும். அதில் ஒரு பயங்கர ஹெட் மிஸ்ட்ரஸ் வருவாங்க. அந்த…