‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

சத்யானந்தன்


ஹிந்தி மற்றும் உருதில் அற்புதமாய் எழுதி செவ்விலக்கிய காலத்தைத் தாண்டி நவீன இலக்கியம் நோக்கி இந்திய இலக்கிய உலகம் நகரும் பரிணாமத்தின் விடிவெள்ளி ப்ரேம்ச்ந்த். தாய் தந்தை இவருக்கு இட்ட பெயர் தன்பத்ராய்.

அவ்ரது காலத்திய (1880-1936) ஹிந்தியின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமையான ஜெய்ஷங்கர் ப்ரசாத் (1889-1937) புராணங்களையும் உயர்குடி மக்களின் சிந்தனைகைள்யும் சுற்றிய கவிதை கதை நாவல்களை எழுதிக் கொண்டிருந்த போது அடித்த்ட்டு மக்களின் அவலங்கைள்ப் பதிவு செய்தார் ப்ரேம்ச்ந்த். இந்திய இலக்கிய வரலாறில் இவரது இடம் ஒப்பற்றது.

ப்ரேம்ச்ந்த் உயர்சாதியான “காயஸ்தா” எனனும் பிரிவில் உதித்தவர். அப்பிரிவினர் தம்மை சித்ரகுப்தனின் வழித்தோன்றல்களாகவும், அந்தணர்-க்ஷத்ரியர் என்னும் இரட்டை அடையாள்ம் உரிய்வராகவும் கருதினர். சுவாமி விவேகானந்தரே தமது பாரம்பரியம் இது என்று குறிப்பிட்டார். ‘இஸ்கான்’ அமைப்பின் ஸ்தாபகர் பிரபு பாதா, மகரிஷி மகேஷ் யோகி, பரமஹம்ச யோகானந்தர், அரவிந்தர் இவர்கள் யாவரும் காயஸ்தா மரபில் தோன்றியவர.

இப்படி ஒரு மேல்சாதி பின்ன்ணி இருந்த ப்ரேம்ச்ந்த்துக்கு எப்படி அடித்தட்டு மக்களீின், தலித்துக்களின் வலி புரிந்தது?

‘முன்ஷி’ என்ற உருது வார்த்தைக்கு குமாஸ்தா அல்லது உதவியாளர் என்று பொருள். பிரிட்டிஷ் காலத்திய தபால் குமாஸ்த்தாவான தந்தையின் முன்ஷி பட்டம் இவருக்கும் வந்தது.இவ்வர்றாக மேல்குடி அரசுப்பணி என்னும் பின்ன்ணியிலிருந்த ப்ரேம்ச்ந்துக்கு வறியோரின் தாழ்த்தப் பட்டோரின் நிலை புரிந்து அதைப் ப்திவு செய்ததர்க்கான காரணம் என்ன?

சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து சித்தி (அப்பாவின் இரன்டாவது தாரம்) குழந்தைகளின் பொறுப்பையும் ஏற்ற அவரது வாழ்க்கை பெரிதும் வறுமையில் கழிந்தது. இரண்டு ரூபாய் கடனை அடைக்க அவருக்கு மூன்று வருடம் ஆனது.

பிள்ளைப்பருவத்தில் அவருக்கு நிகழ்ந்த திருமணம் சில நாட்களிலேயே முறிய உரிய வயதில் அவர் ஒரு விதவையைக் கரம் பிடித்து உறவின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

1910ல் இந்திய சுதந்திரப் போராட்டதின் போது உருதில் “சாஸ்-இ-வதன்” (தேசத்தின் ஒப்பர்ரி) என்னும் சிறுகதைத் தொகுப்பை தேச விடுதலை வேட்கையுடன் வெளியிட்ட போது அது ஆங்கிலேய அரசால் தடை செய்யப் பட்டது. அதன் பிறகே அவர் ப்ரேம்ச்ந்த் என்னும் புனைப் பெயரில் எழுதத் துவங்கினார்.

முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எட்டு நாவல்களையும் “ஹிந்துஸ்தானி” என்னும் மொழிச் சாயலுடன் மக்க்ளின் பேச்சு வழக்கு நடையில் பதிவு செய்த்து இவர்து கால கட்ட்த்தில் புதிய் தடம். வறுமை, அறியாமை, மூட நம்பிக்கைகள், சுரண்டல், ஊழல், லஞ்சம் என சமூக அநீதி பற்றிய கருக்கைள் மைய்யமாக வைத்து அவரது கதைகள் அமைந்தன. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அவர் பேசும் போது ” எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் ஒரு முற்போக்குவாதியே” என்று வாதிட்டார்.

ஒரு படைப்பாளி நான் கவிஞராயிருக்கப் போகிறேன் என்று முடிவு செய்து கவிதை எழுத் இயலாது.

ஆனால் ஒரு உரைநடை மற்றும் புனைகதை எழுத்தாளர் பொருத்தமான உருவம் மற்றும் உள்ளடக்கம் எது என்று சிறுகதை, குறுநாவல், நாடகம் அல்லது நாவல் என்னும் ஏதேனும் ஒரு வடிவத்தைத் தேர்வு செய்ய வேண்டி வரும். குறிப்பாக சிறுகதை மிகவும் வாகான வசதியான ஆனால் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டிய வடிவம். அதன் கூர்மையும் காரமும் வேறெந்த வடிவிலும் வச்ப் படாது. இதை ப்ரேம்ச்ந்த் நன்குணர்ந்திருந்தார். சில கதைகளை சுருக்கமாய்ப் பார்ப்போம்.

சப்யதா கா ரஹஸ்ய (பண்பாட்டின் ரகசியம்) , ஒரு நீதிபதியிடம் ஒரு கிராமத்து விவசாயத் தொழிலாளி வீட்டோடு வேலையாளாக இருக்கிற்ார். அவர் அனுமதி இன்றி ஒரு நாள் விடுப்பில் சென்றதற்காக 2 ரூபாய் அபராதம் விதிக்கும் நீதிபதி தான் போகாத அலுவலகப் பயணத்திற்க்கான படியைக் கோரிப் பெறுகிறார். ஒரு நாள் இர்வு தனது மாட்டுக்குத் தீவனம் இல்லாத்தால் அந்தத் தொழிலாளி ஒரு வயல் வரப்பு ஒரத்தில் உள்ள் புற்களை அறுத்து எடுக்க் போலீஸ்காரர் மிர்ட்டுகிறார். லஞ்சம் கேட்கிறார். காசில்லாத தொழிலாளி மறு நாள் அந்த் நிலச் சொந்தக்காரரிடம் சொல்லிவிடுவதாகக் கூறி மன்றாடுகிறார். ஆனால் போலிஸ் மறுத்து அவரைக் ைக்து செய்து அதே நீதிபதியிடம் நிறுத்துகிற்து. 6 மாத் சிறை தண்டனை விதிக்கும் ஜட்ஜ் தன் அப்பா காலத்து அன்ன தானத்தை நிறுத்தி விடுகிறார்.

நமக் கா தாரோகா (உப்பு இன்ஸ்பெக்டர்) சற்றே சினிமாத்தனமான் இக்கதையில் உப்பு வரி இருந்த் காலத்தில் ஒரு பணக்கார வியாபாரியின் வண்க்டிகைள்ப் பறிமுதல் செய்து உப்பு இன்ஸ்பெக்டர் தனது வேலையையே இழக்கிறார். ஆனால் அதே வியாபாரி அவருக்குத் தனது நிறுவனம் ஒன்றில் வேலை தருகிறார். இதில் மாதச் ச்ம்பளம் முழு நிலவுடனும் உபரி வருமானம் கடவுள் அருளுடனும் ஒப்பிடப் படுவது அங்கதம்.

பன்ச் பரமேஷ்வர்- நீதி கூறும் பீடத்தில் இருப்பவர் எப்படி அந்தப் பீடத்தில் அமர்ந்த்தும் நடுநிலையான தீர்ப்பை வழங்குகிறார் என்னும் கதை.பாரம்பரியமான பஞ்சாயத்து முறையின் ஒரு நற்கூறைச் சுட்டும் கதை.

‘படே பாயீ சாஹப்” (பெரிய அண்ணன்). கூட்டுக் குடும்பம் என்னும் கதம்பப் பூச்சரத்தின் கலவையான மணத்தை எடுத்துக்காட்டுவது. பெரிய அண்ணான் படிக்காதவர். குடும்பத்தில் தொழிலில் படித்த் இைள்ய தம்பி பல மாற்றங்கைள்க் கொண்டு வந்து பெயரும் பெறும் போது ஒரு நிலையில் பொறுக்க முடியாமல் அண்ணன் சொல்கிறார் ” நீ எதில் வேண்டுமானாலும் என்னை விட சிறந்திருக்கலாம். ஆனால் நான் என்றும் உன்னை விட மூத்தவன். இதை மாற்றவே முடியாது.”

‘ஈத்காஹ்” (தொழுகை நடக்கும் மைதானம்) – இந்த் மைதானத்தில் நடக்கும் ஒரு சந்தையில் வாங்கித் தின்ன என்று பாட்டி கொடுத்த நாலணாவில் பேரன் என்ன வாங்கினான்? பல தின் பண்டங்களையும் பார்த்து பிறகு எதையும் தின்னாமல் ‘சிம்டா’ என்னும் இடுக்கி (நெருப்பில் இருந்து ச்ப்பாத்தி எடுப்ப்து) வாங்கிச் செல்கிறான்.

கஃபன் – (சவக்கோடி)- அவரது கதைகளில் ஆகச் சிறந்த்து. வாசல் முற்ற்த்தில் தந்தையும் மகனும் வெந்த உருைள்க்கிழங்கின் எதிரே அமர்ந்திருக்கிறார்கள்.வீட்டின் உள்ளே மருமகள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். மாமியார் எப்ப்போதோ காலமாகி விட்டார். தன் பங்குக் கிழங்கு போய் விடுமோ என்று இருவ்ரும் அசையவில்லை. சற்று நேரத்தில் அப்பெண் குழ்ந்தையுடன் மடிந்து விடுகிறாள். ஊர் ஒன்று கூடி அவளது நல்லடக்கத்திற்காகப் பணம் சேர்த்து சவ்க்கோடி வாங்க என பணம் கொடுக்கின்றன்ர். அதில் சாராயம் வாங்கிக் குடித்து போதையில் உருளுகிறார்கள் தந்தையும் மகனும்.

ஷத்ரன்ஞ் கெ கிலாடி- (சதுரங்க விளையாட்டு வீரர்கள்) இரு இஸ்லாமிய சிற்றரசர்கள் சதுரங்கம் விளையாடுகிறாாகள். அப்போது பிரிட்டிஷ் ராணுவம் ஒவ்வொரு சிற்றரசாக வீழ்த்தி முன்னேறி வரும் செய்தி வந்த வண்ணம் உள்ளது. ஆனால் பாதிப்பின்றி இருவரும் விளையாடி இறுதியில் தத்தம் சதுரங்க ராஜா வீழவில்வை என்று வாள் எடுத்து சண்டை இட்டு ம்டிகிறார்கள். சத்யஜித் ரே படமாய் எடுத்து புகழ் பெற்ற கதை இது.

எட்டு நாவல்கள் எழுதினார். எல்லாமே லட்சியம் மற்றும் நிஜ வாழ்க்கையின் முரண்கள் பற்றியவையே. குறிப்பிடத்தக்கவையில் ‘நிர்மலா’ வரதட்சணை பற்றியது. ‘சேவாசதன்’ லஞ்சமும் ஊழலும் குடும்ப வாழ்க்கையைச் சூறாடுவதையும், ‘கபன்’ நகை ஆசையையும் மைய்யமாகக் கொண்டவை.

இறுதி நாட்களில் சினிமா என்னும் மாய வலையில் சிக்கித் துய்ருற்ற படைப்பாளிகளில் ஒருவேளை இவரே மூத்தவர். அவரது சிறு கதைகள் இலக்கியத்தை நவீனம் என்னும் தடத்தில் கெவ்வுஇலக்கிய விழுமியங்களுடன் எடுத்துச் சென்ற அவரது சிறப்பை வெளிப் படுத்துகின்றன. ப்ரேம்ச்ந்த் என்றும் இச்சிறப்புக்காக என்றும் போற்றப் படுவார்.

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்