அது

This entry is part of 42 in the series 20040819_Issue

சிக்கந்தர் பாஷா


அது ஒரு பின்னிரவு நேரம்
வளைந்து,நெளிந்து ,அலையலையாய்
காற்றில் கலந்துகொண்டிருந்தது
அது!
மழைபொழிந்து சிறைமீட்ட
மண் வாசனையாய்
எங்கும் பரவி
முப்பதுகோடி குரலிலும்
‘என் தாய் ஜனித்தாள் ‘
என்றே ஒளித்தது
அது!
குயிலின் குரலாய்
கடலின் அலையாய்
கவிதையின் சுகமாய்
கிரிக்கெட்டில்
இறுதிபந்துகளில் எகிறும்
இதயமாய்
நியுயார்க்கில் நான்குவருடம் கழித்தவன்
நெல்லையில் நிலம்தொட்டு
இழுத்துவிடும் சுவாசமாய்
பிறவிகொள்கிறது
அது!
பரந்த வான்வெளியினடியில்
பரந்திருக்கும் புல்வெளியில்
தலைசாய மடிதருகிறது
அது!
sikkandarbasha@hotmail.com

Series Navigation