நினைவலைகள்

This entry is part of 30 in the series 20021230_Issue

ஆ.பா.அருண் கணேஷ்.


மறதி நீர் ஊற்றினாலும்
அதன் வேர்களில்
துளிர்விடும் நெருப்பு விருட்சம்
நித்திரையிலே மூழ்கினாலும்
முட்டி முட்டி மேலெழும்
அமுங்காத தக்கை

இதழ்தாமரை மலர
கைகொடுக்கும் சூரிய கிரணம்
விழிமழை பொழிய
வித்தாகும் கார்மேகம்

கண்திரை மூடினாலும்
காட்சிகள் தெரியும்
அதிசய திரைசீலை
ஏனோ பல சமயங்களில்
கீரல் விழுந்த இசைத்தட்டு

இதய பாசறையிலே
குழி தோண்டி புதைத்தாலும்
கரையான் அரிக்காத
சுவையான புத்தகம்
தோண்டாமலே சுரக்கும்
அதிசய ஊற்று

நினைவலைகள் தன்னில்
சிலர் நீந்துகிறார்கள்
பலர் மூழ்குகிறார்கள்

இதில் நீங்கள் எந்த வகை ? ? ?
abarun@pacific.net.sg

Series Navigation