நிலவு
திலகபாமா
சிவகாசி
வெள்ளி நிலவை வெட்கமின்றி
விரகத்தோடு அணைத்தது
ஆண்மனோபாவமேகம்
சந்தடி சக்கில்
தடவிச் செல்லும்
மேகத்துக்கு பயந்து
சன்னல் கம்பிச் சிறைக்குள்
சந்திரனா ?
மேகம் அழவைத்து
மோகம் கரைத்து
வானம் துடைத்து
வந்து ஊட்டும் நிலவு
பச்சிளம் குழந்தைக்கு
பால்சோறு

Oct 28 Sunday 2001 Copyright © Thinnai. All rights reserved.
- நிலவு
- நிலவு