‘Shock and Awe ‘

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

வ.ந.கிரிதரன்


‘ஆவ்வ்வ்வ்…!!!!!!
ஆகா. அமெரிக்க பி-52
விமானங்கள்
தங்கள் குண்டு மழையினைப்
பொழியத் தொடங்கி விட்டன.
ஆகா. என்னே காட்சி. என்னே
காட்சி.
இதுவன்றோ
Shock and Awe…
Awe and Shock…
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!
அதிரும்
ஈராக் நாட்டின் உயர்ந்த
கட்டடங்களைப் பாருங்கள்.
ஒரு நொடியில் தூள்.தூள்… ‘
CNN..NBC..ABC..
நிருபர்களின் ஆச்சரியம்
அதிர்ச்சி ஆவேசம் கலந்த
கூக்குரல்கள் வானலைகளில்.
அங்கு அழியும் , பொடிப்பொடியாக
உதிரும் கட்டடங்களை
அவற்றின் மேல் குண்டுமழை
பொழியும் வானரக்கர்களைப்
பார்த்து வாய்பிளக்கும்
நிருபர்கள். அதிகாரிகள்
கூறுகின்றார்கள்:
‘நாம் உங்களை விடுவிக்க
வந்திருகின்றோம். மக்களே!
நீங்கள் இது வரை பட்ட
துயரத்திற்கெல்லாம்
விடிவு வந்து விட்டது மக்களே! ‘
அங்கே அழியும் காங்ரீட்
சிதறல்களுக்கடியில்
எத்தனை 9-11கள்….
எத்தனை பிஞ்சுகளின் பச்சையுடல்கள்
பஸ்மீகரமாயின
பெண்கள், முதியவரென..
படுகொலைக்கு இன்னுமொரு பெயர்
Collateral Damage.
அமைப்பியல் என்பதன்
அர்த்தம் புரிந்தது.
குறிகளுக்கும் குறிப்பான்களுக்குமிடையில்
உள்ள வித்தியாசம்
புரிந்தது இப்போது.
குறிகள்
கலாச்சாரம், தேசியம், இனத்திற்கேற்ப
புரிபடலின் தத்துவம் தெரிந்தது.
ஒரு பொருளின் பல
அர்த்தங்கள்.
மக்களுக்கு மக்கள்
மண்ணுக்கு மண்
வேறுபடும் அர்த்தங்கள். புரிதல்கள்.
இருபத்தியோராம் நூற்றாண்டின்
ஆரம்பமே மகா
யுத்தத்தின் ஆரம்பத்தில்…
Awe and Shock!!!!!!
Shock and Awe!!!!!!

***
ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்