(Brahmins have become the Dalits)தலித் பிராமணன்

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

பிரான்சியாஸ் கட்டியார் – தமிழில் மணி


மேற்கத்திய அறிஞர்களின் கைவரிசையால் இந்து சமூகத்தின் சாதி என்கிற அமைப்பு திரிக்கப்பட்டது. எந்த இந்தியனும், அதுவும் ஒரு மேற்கத்தியரோடு பேசும் எந்த இந்தியனும் சாதி என்கிற அமைப்பை பற்றி வெட்கப்படாமல் இருக்கவே மாட்டான். அந்த வெட்க உணர்வு இந்திய தேசத்தின் பெருமையை குறையச்செய்வதில் நிறைய பங்கு கொண்டது. இந்த வெட்க உணர்வு ஆரியர்களால் சாதி கண்டுபிடிக்கப்பட்டது என்கிற கருத்துருவாக்கத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஆங்கில மிஸினரிகளும் பின்னர் அமெரிக்க அறிஞர்களும் இந்திய மக்களை நோக்கி “ ஆதிவாசிகளான, ஹிரிஜனங்களான நீங்கள் மட்டுமே பூர்வகுடிகள். ஆரியர்கள் குடியேறிகள். ஆரியர்களின் மதமான இந்து மதத்தை விடுத்து உண்மையின் மதமான கிறிஸ்துவ மதத்தை தழுவ வேண்டும் “ என்று கூறி மதமாற்றம் செய்ய முடிந்தது.

இப்படியாகத்தான் ’ஆரிய குடியேறி; கருத்துருவாக்கம் உருவாகி, உயர் சாதி ஆரியர், தாழ்ந்த சாதி திராவிடர் என்று இருவரையும் மோதவிட்டு பிரித்தாண்ட சூழ்ச்சி, இன்றுவரை ஒரு சில இந்திய அரசியல் தலைவர்களால், அவர்களது பேச்சால் அது நீடிக்கிறது. ஆரிய குடியேற்றம் என்ற ஓன்று நிகழவேயில்லை என்பது தற்போதய மொழி, செயற்கைகோள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்தாலும் மேற்குலக சரித்திர புத்தகங்களும் துரதிர்ஸடவசாமாய் சில இந்திய வரலாற்று அறிஞர்களும் “ஆரிய குடியேற்றம்” என்கிற கருத்துருவாக்கத்தை புனிதமாய் பாவிக்கின்றன. இந்த குடியேறி தத்துவம், தங்களது கடந்த கால மற்றும் நிகழ்கால இந்திய சாதனைகளின் பற்றி பெருமிதம் அடைவதற்குப்பதிலாக, அதற்கு மாறான ஒரு மேற்கத்திய பார்வையை இந்தியர்களை சுமக்கவைக்கிறது.

ஐரோப்பாவின் வர்க்கப்பிரிவைப்போலவே, ஒரு காலத்தில் இந்தியாவின் சாதி அமைப்பும் சமுதாயத்திற்கு தேவையான வேலைப்பகிர்வின் அடிப்படையில் உருவான ஒரு தனிப்பட்ட அடிப்படை கொள்கையே. ஆனால் சாதி அதன் அடிப்படை உண்மையும், தேவையும் பிறழ்ந்து சுரண்டலையும், மன்னிக்கவே முடியாத அளவிற்கு மானுடநேயத்திற்கு எதிரான, மிக மோசமாக நடத்தைகளுக்கும் காரணமியிருந்திருக்கிறது. ஆனால் இன்றைய நிலமையில், பிராமணர்களே இந்தியாவின் தலித்களாக ஆகிவிட்டார்கள். 60 முதல் 65 சதவீதம் தலித்கள் வாழும் உபி கிராமங்களில் பிராமணர்களே சிறுபான்மையினர்; அறிவார்ந்த பிராமணர்கள் தமிழகத்தைவிட்டு புலம்பெயர்ந்து விட்டனர்; ஒரு சாதாரண பிராமணனின் சராசரி வருமானம் ஒரு அபிராமணனின் வருமானத்தைவிட குறைவே ; 75 சதவீத ஆந்திர பிராமணர்கள் சமையல் மற்றும் வீட்டு வேலைத்தொழிலும் ஈடுபடுகிறார்கள்; பெரும்பாலான டில்லி கழிவறைகள் பிராமணர்களாலே சுத்தம் செய்யப்படுகிறது ; ( இந்திய பிராமணர்கள் : ஜெ ராதாகிருஸ்ணா, செளக் பதிப்பகம் 2007).

கடந்த 60 வருடங்களாக இந்திய சாதி அமைப்பை துறந்துவிட துடிக்கிறது. ஒரு சில வெற்றித்துளிகளும் இருக்கத்தான் செய்கின்றன. விமானத்தில், உணவகத்தில், பல்பொருள் அங்காடியில் உயர்சாதிக்காரனையும் தாழ்ந்த சாதிக்காரனையும் பிரித்துப் பார்க்க முடியாது. அரசாங்கம் தங்களது நிறைய திட்டங்கள் மூலம் தாழ்த்தப்பட்டோரை சமூக, கல்வி தளங்களில் வெற்றிகரமாக பலப்படுத்தியிருக்கிறது, சிலசமயம் அத்தகைய திட்டங்கள் விருப்பமற்ற விழைவை உருவாக்கியிருந்தாலும். ஆனால் இன்று சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்று வாதிடுபவர்கள், சாதியை ஓழிப்பதற்கோ, வறுமையை துடைப்பதற்கோ இதை கேட்கவில்லை. தாங்கள் ஆட்சிபீடத்தில் அமர்வதற்கு மூஸ்லீம் மற்றும் தலித்துகளுக்கு குரல் கொடுத்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். இது ஆங்கிலேயர்கள் விருப்பபடி இந்தியாவை மேலும் மேலும் பிரித்தாளும் ஒரு மோசமான சுயநலமான செயலேயாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் அத்னால் இந்து சமூகத்தில் 40% அங்கம் வகிக்கும் தலித்தில்லாத மற்ற இந்துக்களே பெரும்பாலும் அதீத பாதிப்படைவர். இப்போதய் இந்தியாவில் பெரும்பான்மையான இந்துக்கள் கொஞ்சம் கூடாத முக்கியத்துவமில்லாத சிறுபான்மையினர் போல நடத்தப்படுகின்றனர். இந்தியாவில் 26/11 மும்பை தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததற்காக கைதான இரு முஸ்லீம்களை விடுதலை செய்வது இலகுவானதாகவும், சரியானதாகவும் இருக்கிறது, ஒரு மேஜரான சுவாமி நித்தாயனந்தா இன்னொரு மேஜரான பெண்ணுடன் அவருடைய சம்மதத்தின் பெயரில் உடலறவு கொண்டதற்காக சிறையில் தள்ளப்படுகிறார். வேக வேகமாய் மாலோகான், அஜ்மீர் வழக்குகளில் இந்து தீவிரவாதிகள் என்று குற்றம்சாற்றப்பட்டு சிறையில் எந்த வழக்கு விசாரணையுமின்றி நாட்கணக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தள்ளப்படும் அதே வேளையில் புனே ஜெர்மன் பேக்கரி வழக்கில் ஈடுபட்டவர்கள் (இவ்வளவு நாளாய்) கைது செய்யப்படாததற்கு அரசியல் துணிவின்மையைத் தவிர வேறென்ன காரணமிருக்கமுடியும்.

இந்தியாவின் இப்போதய அரசால் ஏராளமான நிறுவனங்கள் அழியவோ, பாதிப்படையவோ செய்யப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்ததற்காக மாயாவதியின் மீது சுமத்தப்பட்ட எல்லா சிபிஐ வழக்குகளும் தூக்கியெறியப்பட்டுள்ளது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது, ஆயிரமாயிர கோடிகள் லஞ்சம் வாங்கிய அரசியல்வாதி ஏய்த்தி பிழைத்து, தப்பி ஓடுகிறார் மற்றும் தங்களது குரலை எழுப்பவே மக்கள் அஞ்சுகிறார்கள். இந்தியாவில் ( Hindutva, Sex & Adventures எழுதிய) சர் மார்க் தூலிதான் நடுநிலை இதழியலின் கதாநாயகன். பின்பற்ற படவேண்டிய பிம்பம். அவர் பிபிசியில் தெற்காசியவில் நிருபராக இருந்தபோது கடைபிடித்த நெறிமுறைகள்தான்,(சொல்லரசியல்கள்தான்) இன்னும் இந்தியா பற்றிய கருத்தை களங்கப்படுத்திக்கொண்டிருக்கிறது.

மத்திய 80களில் பண, ஆயுத, ஆள் உதவிகள் மூலம் பாகிஸ்தான் காஸ்மீர பிரிவினைக்காக ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த காலங்களில் துலி சொன்னார் : “ இந்தியா பாகிஸ்தான் பிரிவினை தூண்டுவதாக குற்றம் சாட்டுகிறது “ அல்லது “ இந்தியா ஆக்கிரமித்திருக்கிற காஸ்மீரில் தேர்தல் நடக்கிறது : அல்லது “ காஸ்மீர் போராளிகள் எல்லைப்புற ராணுவத்தால் தாக்கப்பட்டார்கள். ( அவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்) அதற்குப்பிறகு எல்லா வெளிநாட்டு நிருபர்களும் அன்றைக்கும், இன்றைக்கும் பிபிசி ஏற்படுத்திய சொல்லதிகாரத்தையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பிபிசியால் வார்க்கப்பட்ட இந்த வெறுப்பு உணர்வு அமெரிக்க ஜனாதிபதி பிரசிடெண்ட் ஓபாமா தனது தெற்காசிய கொள்கையை வடிவமைக்கும்போது பாதித்திருக்கலாம். அதனாலே உலக தீவிரவாதத்தின் முக்கால் பாகம் தன்னகத்தே ஊக்குவிக்கும் திருநாட்டின் தீவிரவாதத்தை ஓழிப்பதன் மூலம் எல்லாம் சாத்தியாமாகும் என நினைக்கிறார். ஆகவே காஸ்மீர் இறையாண்மை, பிரச்சனையை தாண்டி(மறந்து) இந்தியாவை பாகிஸ்தானோடு சமாதானம் பேசும்படி கட்டாயப்படுத்துகிறார். பக்கத்து நாடான சீனாவின் அணு ஆயுத வளர்ச்சிக்கு பின்னரும், பாகிஸ்தானை கருத்தில் கொண்டு இந்திய இராணுவ அணு ஆயுத திட்டங்களை ஓடப்பில் போட மன்மோகன் சிங்கை நிர்பந்திக்கிறார். இதுபற்றி அமெரிக்க ராணுவத்துடன் ஒரு ரகசிய முடிவுக்கு இந்தியா வந்திருக்கலாம் என தோன்றுகிறது. சாதி கணக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தின் பெயரை சொல்லி ஜனநாயத்தை அழிக்கும் மற்றொரு சொல் சுழலே.

Series Navigation