‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு

This entry is part of 38 in the series 20091015_Issue

சு. குணேஸ்வரன்


சு. குணேஸ்வரனின் ‘அலைவும் உலைவும்’ என்ற புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த கட்டுரைகள் உள்ளடங்கிய நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 18.10.2009 ஞாயிறு, காலை 9.00 மணிக்கு யாஃதேவரையாளி இந்துக் கல்லூரி திறந்தவெளி அரங்கில் பருத்தித்துறை ப.நோ.கூ. சங்க வர்த்தக முகாமையாளர் திரு வே. பரமானந்தம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

வாழ்த்துரைகளை மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் தெணியான், இலக்கியச்சோலை து. குலசிங்கம் ஆகியோர் நிகழ்த்துவர். நூலின் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக கல்வியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணியும், நூல் மதிப்புரைகளை யாழ். பல்கலைக்கழக சமூகவியற்றுறை, விரிவுரையாளர் இரா.இராஜேஸ்கண்ணனும், தமிழ்த்துறை, உதவி விரிவுரையாளர் த. அஜந்தகுமாரும் நிகழ்த்துவர்.

நூலின் முதற்பிரதியை அம்பன் அ.மி.த.க பாடசாலை அதிபர் பொ. சிவராசா அவர்கள் பெற்றுக் கொள்வர். ஏற்புரையை நூலாசிரியர் சு. குணேஸ்வரன் நிகழ்த்துவார்.

mskwaran@yahoo.com

Series Navigation