யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
வணக்கம்.
கடந்த 14 செப்டம்பர் 2008 அன்று வடக்கு வாசல் மாத இதழின் நான்காம் ஆண்டுத் துவக்க விழா. புது தில்லி இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த விழாவில் விஞ்ஞானியும் கவிஞருமான ய.சு.ராஜன் அவர்கள் தலைமை வகித்தார். இன்டெலக்சுவல் வென்சர்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணன், ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.ராமதாஸ், கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ் பள்ளியின் நிறுவனர் சனத்குமார், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
வடக்கு வாசல் இலக்கிய சிறப்பிதழ் 2008 ஐ டாக்டர் அப்துல் கலாம் வெளியிட்டார்.
இந்த இலக்கிய இதழில் உங்களுடைய படைப்பு இடம் பெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. உங்களுக்கு இதழ்களை எப்படி அனுப்புவது என்று எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களின் பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம்.
இந்த விழாவில்
http://www.vadakkuvaasal.com
என்னும் இணையதளத்தினையும் டாக்டர் அப்துல் கலாம் திறந்து வைத்தார்.
ஒவ்வொரு மாதமும் 22ம் தேதிக்குப் பிறகு அந்த மாதத்தின் இதழை இங்கே வாசிக்கலாம்.
நண்பர்கள் இந்த இணையதளத்துக்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுடைய நண்பர்களுக்கும் மற்ற இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இணையதளத்தினை அறிமுகப்படுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எங்களுக்கு வேண்டும்.
அன்புடன்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
—
K.PENNESSWARAN
VADAKKU VAASAL PUBLICATIONS
V2 IMAGES & EVENTS
5A/11032, Second Floor, Gali No.9
Sat Nagar, Karol Bagh
New Delhi-110 005.
Telefax: 011-25815476/65858656/9211310455
blog: http://www.sanimoolai.blogspot.com
——————–
வடக்கு வாசல் மூன்றாம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 இதழை வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் மிகவும் அன்புடன் சமர்ப்பிக்கிறோம். இந்த இலக்கியச் சிறப்பு மலர் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் குழந்தைகளுக்கும் ஆதர்சமாகத் திகழும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருக்கரங்களால் மலர்வதை எங்களுக்குக் கிட்டிய பெரும்பேறாகக் கருதுகிறோம். வடக்கு வாசல் இதழின் முதல் இலக்கியச் சிறப்பு இதழ் முயற்சி இது. இனி வரும் காலங்களில் இது செழிப்புடன் தொடர உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் வேண்டும்.
இலக்கிய இதழுக்கு மணம் சேர்க்கும் படைப்பாளிகள்…
சிறுகதைகள்
இந்திரா பார்த்தசாரதி
பாவண்ணன்
பி.ஏ.கிருஷ்ணன்
மேலாண்மை பொன்னுச்சாமி
நா.விச்வநாதன்
சிறில் அலெக்ஸ்
பா.திருச்செந்தாழை
என்.சொக்கன்
பெருமாள் முருகன்
ராஜ்ஜா
நீல பத்மநாபன்
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
வெ.சந்திரமோகன்
ஜெயா வெங்கட்ராமன்
எஸ்.ஷங்கரநாராயணன்
உஷாதீபன்
புதியமாதவி
பத்ரிநாத்
கட்டுரைகள்
கி.ராஜநாராயணன்
வாஸந்தி
அசோகமித்திரன்
கோபால் ராஜாராம்
வ.ந.கிரிதரன்
எம்.ஏ.சுசீலா
குரு.ராதாகிருஷ்ணன்
கஸ்தூரி
செ.ரவீந்திரன்
கவிதைகள்
ய.சு.ராஜன்
அகஸ்டஸ்
மா.காளிதாஸ்
திலகபாமா
ஜே.எஸ்.அனர்கலி
கொப்பரமுழுங்கி
அண்ணா கண்ணன்
ஜோதிபெருமாள்
பஹீமாஜஹான்
ராம் பொன்ஸ்
பக்கங்கள் – 124 விலை ரூ.50
பதிவு அஞ்சலில் பெற விரும்புவோர் ரூ.20 சேர்த்து அனுப்ப வேண்டும்.
- அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணா
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 3
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்-தாமரையம்மையார் அறக்கட்டளை நான்காம் பொழிவு
- தாகூரின் கீதங்கள் – 49 நெஞ்சில் குத்தியது முள் !
- மகா அண்ணா!
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதனை !
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் : காலைக் கவிதை -4
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- இணையத்தில் தமிழ் அதிகமாக புழங்குகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது
- விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
- நினைவுகளின் தடத்தில் – (18)
- மூன்று
- கடிதம்
- இலக்கியப் போட்டி 2008
- தமிழ் விடு தூது – 1
- பின்நவீனத்துவத்தின் மரணம்/முடிவு அல்லது பின்னைபின்நவீனத்துவம் அல்லது நிகழ்த்தலியம்
- வேத வனம் விருட்சம் 4
- “18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் தேசத்தின் துரோகி”
- ஹைக்கூ – துளிப்பாக்கள்
- பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.
- தீராத கேள்விக் கரையோரம் பிலால்
- உறுத்தல்…!
- சிதறும் பிம்பங்கள்..!
- மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும்
- இந்த நூற்றாண்டின் மகள்.
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)
- விஸ்வரூபம் – அத்தியாயம் எட்டு