சென்னைத்தமிழில் கணினி

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

வைஷாலி


சமீபத்தில் பலர் தமிழில் கணினியை கட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெல்க என்று வாழ்த்துவதோடு, சென்னைத்தமிழுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லாதது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆகவே என்னுடைய சிறு முயற்சியாக சென்னைத்தமிழில் கணினி வார்த்தைகளை அறிமுகம் செய்கிறேன்.

Open = தொற நைனா

Close = பொத்திக்கோ

Print Preview = பாத்து பிரிண்டடி

View = லுக்கு உடு

Cut = வெட்டு குத்து

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்சத் தொட்டு ஒட்டு

File = பைலு

Save = வெச்சுக்கோ

Save as = அப்டியே வெச்சுக்கோ

Save All = அல்லாத்தையும் வெச்சுக்கோ

Find = தேடினாத் தாவலை

Find Again = இன்னோரு தபா தேடு

Move = ஜகா வாங்கு

Zoom = பெர்சா பிலிம் காட்டும்மா

Zoom Out = வெளில வந்து பெர்சா பிலிம் காட்டும்மா

New = புச்சு

Old = பல்சு

Replace = இத்த தூக்கி அத்ல போட்டு அத்தத் தூக்கி இத்ல போடு

Run = ஓடு நைனா

Execute = கொல்லு

Delete = கீசிடு

Tools = ஸ்பான்னரு

Toolsbar = ஸ்பான்னர் செட்டு

Exit = உட்ரா டேய்

Compress = அமுக்கிப்போடு

Scrollbar = இங்க அங்க அல்லாடாத

Next = அப்பால

Previous = முன்னாகடி

Trash bin = குப்ப தொட்டி

Drag & hold = நல்லா இஸ்து புடி

Double click = ரெண்டு தபா அமுக்கு

Do you want to delete selected item ? = மெய்யாலுமே தூக்கிறவா ?

Do you want to move selected item ? = மெய்யாலுமே கடாசிடவா ?

Do you want to save selected item ? = மெய்யாலுமே வச்சிக்கவா ?

Abort, Retry, Ignore = இவுட்டுடு , இன்னொரு வாட்டி பாரு, தொலயுது வுடு

Yes,No,Cancel = இப்ப இன்னா சொல்லிக்கிற நீ ?

General protection fault = அல்லாம் காலி அம்பேல்மா

Access denied = கை வச்சே , கீசிடுவேன்

Unrecoverable error = தொலஞ்சது தொலஞ்சது தான்

Operation illegal = பேமானி… சாவுக்கிராக்கி… கஸ்மாலம்

***

Series Navigation

தமிழில்: வைஷாலி

தமிழில்: வைஷாலி