சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
சுப்ரபாரதி மணியன்
சதாவதானி செய்குதம்பி பாவலர் பற்றிய கருத்தரங்கம் நாகர்கோவில் இந்து கல்லூரியில்நடைபெற்றது. நெசவாளர்குடும்பத்தில் பிறந்தவர். சதாவதானியாக மிளிர்ந்து சைவ இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவர். உருவ வழிபாடா, சரஸ்வதி துதி பாடலா,முழு உருவ படமா என்று சர்ச்சையில் இருந்தவர். அவரின் படைப்புகள் பல் வேறு கோணங்களில் அமைந்திருந்தன.அவரின் குடும்பத்தைச் சார்ந்தவரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.பொன்னீலன், தோப்பில் முகமது மீரான்,சிரிகுமார் ஆகியோரின் பேச்சுகள் கவனத்திற்குரியவை.சா அ. தென்னிந்திய செயலாளர் இளங்கோவனின் பேச்சு விரிவாக இருந்தது. பலரின் பேச்சு தயாரிப்பை வீணாக்கி விட்டது என்று சில கவலை கொண்டனர். என் பேச்சு பாவலரின் புலமையும், வறுமையும் என்பதாகும். சதாவதானத்தில் ஒரு அங்கமான சீட்டாட்டத்தில் அவரின் புலமை வறுமையோடு விளையாடியது என்பது என் மையமாக இருந்தது. சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெறவில்லை.
==
சிற்பி ரஸ்ய பயணம்
====================
சாகித்திய அகாதமியின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்ரமணியன் ரஸ்யப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் உலக புத்தகக் கண்காட்சியில் பேசுகிறார்.பயணத்தில் பங்கு பெற்றிருக்கும் இன்னொரு தமிழ் எழுத்தாளர் பாமா ஆவார்.
=========================================================== ====================
எனது நூல்கள் மொழிபெயர்ப்பில்:
=============================
1. என் சாயத்திரை நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு ” சாயம் புரண்ட திர” திருவனந்தபுரம் “சிந்தா ” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ரூ 85
. மொழிபெயர்த்தவர்: கோவையைச் சார்ந்த ஸ்டான்லி அவர்கள்.சாயத்திரையின் இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புகள் முன்பு வெளியாகி இருக்கின்றன.
2. எனது நாவல் ” பிணங்களின் முகங்கள் ” ஆங்கில மொழிபெயர்ப்பில் ” The faces of the dead ” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. 220 பக்கங்கள். மொழிபெயர்த்தவர்: ஆர் பால கிருஸ்ணன், கோவை
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முடிவாகவில்லை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை