சுனாமி வைத்தியம்!

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

என்.எஸ்.நடேசன்


நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில், மிருகவைத்தியர்களிடம் வருடம் ஒருமுறை பாிசோதித்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஒருவகை. உடல் நலம் கெட்டபோது மட்டும்வந்து மிருகவைத்தியாிடம் சிகிச்சை பெறுபவர்கள் இன்னெருவகையினர். இந்த இரண்டாவது வகையினர் என்னைப் பொறுத்த வரையில் சுனாமி வகையரா. ஏதாவது பாாிய நோய் ஏற்பட்டிருக்கும்போது, நாள்பட்ட பின்பு தான் மருத்துவ உதவியை நாடுவார்கள். மூன்று நாட்கள் உணவு உண்ணாத நாயாகவோ, ஐந்து நாட்கள் மலம் கழிக்காத பூனையாகவோ இருக்கும். நோயின் மூலத்தை அறிய இரத்த பாிசோதனை, X Ray என பல விடயங்களில் ஈடுபடவேண்டும். இவர்களுக்கு அதிக பணமும், வைத்தியர்களுக்கு பிரயத் தனமும் தேவைப்படும். சிலவேளைகளில் சிகிச்சைக்கு காலம் சென்றும் போய்விடும். ஒழுங்காக வருடா வருடம் வருகை தருபவர்கள் சிறிய குணக்குறைவு ஏற்பட்டவுடனேயே தங்கள் செல்லபிராணிகளை வைத்தியரிடம் கொண்டுவந்து விடுவார்கள். ஒரே மருந்தில் அதிக செலவற்று குணமடைய கூடியதாக இருக்கும்.

செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில், மிருகவைத்தியர்களிடம் வருடம் ஒழுங்காக வருபவர்கள் தங்கள் விடயத்திலும் இப்படியான ஒழுங்கு முறையை கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். வருடத்துக்கு, இருமுறை இரத்த அழுத்தம், வருடம் ஒரு இரத்த பாிசோதனை, இருவருடத்துக்கு ஒருமுறை மார்பக பாிசோதனை என செய்வார்கள். வளர்ந்த நாடுகளில் இப்படியான ஒழுங்கான பாிசோதனைகள் நாட்டில் சுகாதார செலவை குறைக்கும்.

மாாியில் பெய்யும் மழையின் அளவுகளை தொிவதன் மூலம் வெள்ளத்தை தவிர்க்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் அழிவுகளை தவிர்த்துக் கொள்ளமுடியும்.

நான் அறிந்த சுனாமிக்குடும்பத்தின் கதை இது.

எட்டு வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சும் அவர் மகன் டேவிட்டும் இரண்டு அழகான ஜோ;மன் செப்பேட் எனப்படும் அல்சேசன் நாய்களை எனது கிளினிக்கு கொண்டு வந்தனர். ஜேம்ஸ்க்கு பாாிய உடம்பு, நிறைமாத வயிறு, பேசும்போது மூச்சு இழைக்கும். டேவிட் இருபது வயது இளைஞன்.

‘இரவு முழுவதும் வாயால் அதிக எச்சில் வடிந்தபடி இரண்டு நாய்களும் ஒரே இடத்திலே நிற்கின்றன. அமைதியற்ற நிலையில் காணப்படுகின்றன. இரவு சாப்பாடையும் உண்ணவில்லை. அதிசயமாக இருகிறது ‘ என்றார் ஜேம்ஸ் மூச்சு இரைக்க நான் கூர்ந்து பார்த்தபோது எச்சில்வடிவதோடு வாய்களையும் திறக்கமுடியாமல் இருந்து கண்களும் மேல் பக்கமாக செருகியபடி ‘சிலுக்கு சுமிதா ‘ வின் கண்களை போல் இருந்தது.

‘எதாவது நச்சுப் பொருளை உண்டிருக்க வேண்டும். எதுவென்று தொியாமல் விசேட சிகிச்சை அளிக்கமுடியாது. இரத்த பாிசோதனைக்கு அனுப்பி விட்டு இரண்டு நாய்களுக்கும் சேலையின் ஏற்றுகிறேன். தற்போது எனது பொறுப்பில் விட்டு விட்டு போங்கள் ‘ என இருவாிடமும் கூறினேன்.

இரத்த பாிசோதனையில் எதுவும் இல்லை. டேவிட் இடம் தொலைபேசியில் ‘உங்கள் வீட்டில் ஏதாவது போதை மருந்து அல்லது தூக்க மாத்திரைகள் உள்ளதா ‘ எனக்கேட்டேன்.

‘கஞ்சா கலந்த கேக்குகள் இருந்தன. அவற்றை நாய்கள் உண்டிருக்கலாம். அப்பாவிடம் சொல்ல வேண்டாம் ‘ என்று கூறினான் டேவிட் இரண்டு நாட்களில் இரண்டு நாய்களும் முற்றாக, குணமடைந்துவிட்டன.

இரண்டு வருடத்தின் பி;ன்பு ஒரு மாலை நேரம் பெண் நாயை ஜேம்ஸ் கொண்டுவந்து ‘டொக்டர், குட்டி போட கஸ்டப்படுகிறது ‘ நாயை இரவிரவாக சிசோியன் செய்து குட்டியை எடுப்பததேன்.

அதன்பின் சில வருடம் காணவில்லை. வீடுமாறி விட்டார்களோ எனக்கூட நினைத்தேன்.

மீண்டும் டேவிட் ஒரு நாயை கொண்டுவந்தான். ‘இது புதிதாக இருக்கிறதே ? வேண்டினீர்களா ? ‘.

‘இல்லை நீங்கள் சிசோியின் பண்ணி எடுத்து குட்டி. இதன் பெயர் ரிபல் ‘ என்றான்.

‘என்ன பிரச்சனை ‘ என்றேன், நாயின் அழகை பார்த்தபடி. எந்த நாய்களிலும் இல்லாத கம்பீரம் அழகும் இந்த ஜேர்ம்ஸ்செப்பேட்டாடம் உள்ளது. இவற்றின் புத்தி கூர்மையும் கீழ்படிவும் பிரசித்தியானது.

‘கால்மூட்டு வீங்கி இருக்கிறது. ‘

தொட்டுப்பார்த்த போது சூடாக இருந்தது. ‘சீழ்பிடிந்து இருக்கிறது ‘ என்று சொல்லிவிட்டு, மெதுவாக சீழை ஊசியால் குத்தி எடுத்தேன். டேவிட், அப்பா எப்படி, பலகாலமாக காணவில்லை ? என்றேன். வேலை செய்யும் போது சம்பாசணையை வைத்திருக்க வேண்டுமென்ற காரணத்திற்காக.

‘அப்பா இரண்டு கிழமைக்கு முன்பு இறந்து விட்டார் ‘

திடுக்கிட்டு நிமிர்ந்து ‘என்ன நடந்தது ‘ என்று அதிர்ச்சியுடன் வினவினேன்.

‘அப்பா டாக்சி ஓடுவது உங்களுக்கு தொியும் தானே ? சிவப்பு லைட்டில் நின்றபோது இதயம் நின்று விட்டது. கார் லாம் போஸ்டில் அடித்து நின்றது. ‘

‘காருக்குள் யாரும் இல்லையா ? ‘

‘ஆஸ்பத்திரியில் ஒருவரை இறக்கி விட்டுவரும் போது நடந்தது. ‘

‘நம்பமுடியாமல் இருக்கிறது. எனது அனுதாபங்கள் ‘

‘அப்பாவுக்கு இதய வருத்தம் இருப்பது தெறியாது. காரணம் கடந்த பத்து வருடங்களாக வைத்தியாிடம் செல்லவில்லை. ‘

‘அப்பாவை போல் பலர் உண்டு” – என்று கூறி விடை பெற்றேன்.

சில வருடங்களின்பின் டேவிட்டை மீண்டும் நடத்தி வந்த போது ஆண் நாயின் சிறுநீரோடு இரத்தம் வருவதாக சொன்னான்.

இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்து X Ray ம் எடுத்து புற்றுநோய் கட்டி வந்து இருப்பதாக கூறினேன்.

‘என்ன செய்யலாம் டொக்டர் என்றான் தற்பொழுது விதையை சந்திர சிகிச்சை மூலம் எடுத்தால் புற்றுநோய் சிறிதாகும் ‘ என்று கூறினேன்.

‘சாி ‘ என்று சம்மதித்து நான்கொடுத்த படிவத்தில் கையெழுத்திட்டான்.

‘டேவிட், எப்பொழுது நீங்கள் வந்தாலும் சீரியசான நோயாகத்தான் இருக்கும். வருடாவருடம் வந்து நாய்களை பாிசோதித்தால். செலவும் குறைவு. பல நோய்களை தவிர்த்து கொள்ளளாமே ‘என்றேன்.

டேவிட்டின் சிரிப்பு பதிலாக வந்தது.

‘மிருகங்களைத்தான் இப்படி கொண்டுவருவது பரவாயில்லை. நீங்களாவது அப்பாபோலில்லாமல் ஒழுங்காக வைத்தியரிடம் போக வேண்டும். ஆஸ்திரேலியாவில் இலவச வைத்தியம் வசதிகள் இருந்தும் ஏன் பாவிப்பதில்லை ?. ‘

இதை சொல்ல நினைத்தேன். மிருகங்கள் பற்றிய ஆலோசனையோடு நின்று விடுவது என நினைத்ததால் சொல்லவில்லை

—-

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்