பூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue


28.12.2003 ஞாயிறு அன்று

மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

இடம்: ருக்மிணி அருண்டேல் அறக்கட்டளை

(காசி மடத்துக்குப் பின்புறம்-மேட்லிசாலை சுரங்கப்பாதை முனையில்)

52.குப்பையா தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை-600 033

தொ.பே.2371 6507

நேரம்: மாலை 6.00மணி

நிகழ்ச்சி நிரல்

பூரணி கவிதைகள்(காலச்சுவடு பதிப்பகம்)

வெளியிட்டுப் பேசுபவர்: திரு இரா.முருகன்.

‘க்ருஷாங்கினி ‘ கதைகள்(சதுரம் பதிப்பகம் வெளியீடு)

வெளியிட்டுப் பேசுபவர்: திரு மாலன்.

பரதம் புரிதல்-க்ருஷாங்கினி(சதுரம் பதிப்பகம் வெளியீடு)

வெளியிட்டுப் பேசுபவர்: திரு பிரபஞ்சன்.

அனைவரையும் வருக வருக என்று அழைக்கும்,

அ.நாகராஜன், க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன்

அன்னை (மகள் -அன்னை ) மகள்>>>>

அன்னை

மகள் அன்னை

மகள்

அன்னை(மகள்-அன்னை) மகள் என்ற மூன்று தலைமுறைப்

பெண்களின் எழுத்துத் தொடர் எனக் கூறலாம் இவ்வெளியீட்டு விழாவை.

இதில் ‘பூரணி ‘ கவிதைகள், க்ருஷாங்கினி கதைகள், பரதம் புரிதல் என்று

மூன்று புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

‘பூரணி ‘ 1913இல் பிறந்தவர். 1929 முதல் இன்றுவரை தொடர்ந்து கவிதைகளும் கதைகளும் எழுதிவருபவர். இன்று அவருக்கு வயது 91. அவருடைய முதல் தொகுதி இது. இதில் அவருடைய தொடக்க காலப் படைப்புகள் முதல் இன்றைய படைப்புகள் வரை வகைக்குச் சில இடம் பெறுகின்றன.

பூரணி 1935 முதல் பெண்களுக்கு ஹிந்தி பயில்வித்து வந்துள்ளார். ஹிந்தியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்கும் பல நல்ல நாடகங்களையும் கதைகளையும், நாவல்களையும் தந்த சரஸ்வதி ராம்நாத் தனது மாணவர் என்பதில் பூரணிக்குப் பெருமை உண்டு. பூரணியும்

ஹிந்தியிலிருந்து தமிழுக்குச் சில மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். அதில் கபீர் கவிதைகள் சில இதில் இடம் பெறுகின்றன. தேசிய உணர்வுகளை நலங்குப் பாடல்களில் தமிழகம் முழுவதும் பரவவிட்டவர் அவர்.

கடந்த 25 ண்டுகளில் எழுதிய சிறுகதைகளில் 32 கதைகள் தொகுக்கப் பட்டு ‘கிருஷாங்கினி கதைகள் ‘ என்ற புத்தகமும் வெளிவர உள்ளது. 1998இல் ‘கானல் சதுரம் ‘ என்னும் கவிதைத் தொகுப்பும், ‘சம காலப் புள்ளிகள் ‘ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தன. அவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் நாடு அரசு விருதும், கவிதைத் தொகுதிக்கு கவிஞர் தேவமகள் விருதும் அளிக்கப்பட்டன. ‘க்ருஷாங்கினி ‘, தமிழில் நவீனக் கவிதை எழுதிவரும் -உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்- பெண் கவிஞர்களை ஒருங்கிணைத்து 52 பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ என்ற முதல் பெண் கவிஞர்களின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

‘க்ருஷாங்கினி ‘ யின் மகள் நீரஜா நாகராஜன் தனது ஆறு வயது முதல் பரத நாட்டியம் பயின்றவர். சென்னை ‘கலாக்ஷேத்திர ‘த்தில் கற்று பரத நாட்டியத்தில் பட்டயமும் பெற்றவர். இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடன நிகழ்ச்சிகள் கொடுத்தவர். தற்போது சிங்கப்பூரில் ‘பாஸ்கர் கவின் கழக ‘த்தில் நடன ஆசிரியையாகவும், நிகழ்கலை நிகழ்த்துபவராகவும் பணி புரிகிறார். நீரஜா தமது அன்னை ‘க்ருஷாங்கினி ‘ யுடன் இணைந்து பரத நாட்டியத்தை பார்ப்போர் எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கும் நோக்கத்துடன் ‘பரதம் புரிதல் ‘ என்ற தொடர் ஒன்றை ‘ஆறாம் திணை ‘இணைய இதழில் எழுதினார். அதில் பரத நாட்டியத்தில் அடவு, முத்திரை, அபிநயம் ஆகியவை என்பது என்ன என்பதும் ஒரு நடன நிகழ்ச்சியின் தொடக்கமாக அமையும் ‘அலாரிப்பு ‘ முதல் முடிவு வரை விளக்கப் படங்களுடன் வந்தது. அதையும் அத்துடன் ‘க்ருஷாங்கினி ‘ கடந்த பத்து ண்டுகளில் நடனக் கலைஞர்களை கண்டு எழுதிய நேர்காணல்களும் தொகுத்து ‘பரதம் புரிதல் ‘ என்னும் புத்தகத்தையும் வெளியிடுகிறது ‘சதுரம் பதிப்பகம் ‘. இதில் நீரஜா நாகராஜன் தாம் பரத நாட்டிய வடிவில் அமைத்து நடனமாடிய புதுக் கவிதைகளையும் மரபில் கையாண்டுவரும் பாடல்களையும் notation என்ற கணக்குகளுடன் தேர்ந்தெடுத்த ராகங்களில் பாடி, ஆடிடும் வகையில் இணைத்துள்ளார். இனி வரும் காலங்களில் எவரும் இவற்றை எடுத்துக்கையாளலாம். நாட்டியமாக வடிவமைக்கலாம்.

++++++++++++++++++++

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு