பாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

கூப்பி


இது ஒரு சாதாரண விமர்சனம் இல்ல…ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு போயி ஏமாத்தத்தோட திரும்பின ஒரு ஷங்கர் fan ஓட பொலம்பல். எப்படி டைரக்டர் ஷங்கர் இப்படி ஒரு படத்தை எடுத்தாருன்னு தெரியலை. இப்படித்தான் இளைய சமுதாயம் இருக்கும்னா எனக்கு அதை நெனச்சு ரொம்ப வருத்தமா, பயமா இருக்கு. இது என்னோட தனிப்பட்ட விமர்சனம். ரொம்ப முக்கியமா ‘ஒரு வரி கண்டனக் கடிதம் ‘ எழுத மெனக்கடாதீீங்க…முடிஞ்சா பதில் விமர்சனம் எழுதுங்க…

ஷங்கர் படம் எப்போதும் கமகமக்கற முட்டை பிரியாணி மாதிரி. அந்த பிரியாணிலதான் இந்த தடவை என்னல்லாம் பிரச்சனை !!

மொதல்ல கதை….நல்ல முட்டை பிரியாணிக்கி அரிசியும் அதை வடிக்கிற விதமும் ரொம்ப முக்கியம். ஷங்கர் படத்துல கதை ஓரளவு strong ஆ இருக்கும் (காதலன் தவிர). அதோட முக்கியமானது அந்த கதைய அவர் நகத்தி கொண்டு போற விதம் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கும். ஒரு ஜெண்டில்மேனோ இந்தியனோ முதல்வனோ, கதையை முக்கியப்படுத்தி எடுக்கப்பட்ட படம். அடுத்து என்ன நடக்கும்னு எதிர்பாக்க வெச்ச படம். Boys ல இருக்கற கதை என்னன்னு தெரிய மொதல் பாதி படம் பாக்க வேண்டியிருக்கும். அதுக்கு அப்பறம் அப்படி ஒண்ணும் பெரிசா இல்லன்னு தெரிய வரும். அஞ்சு பேரு வீட்டை விட்டு வெளிய வந்து வாழ்க்கைல ஜெயிக்கறதை ஒரு valid கதைன்னு எடுத்திட்டாக்கூட, அதை சொல்றதுக்கு ரொம்பவே தெணறிக்கிறாரு. Boys ஜெயிக்கிறாங்களா தோக்கறாங்களான்னே புரியாத அளவுக்கு கொழப்பமோ கொழப்பம்.

அடுத்தது மசாலா…பிரியாணிக்கி மசாலா முக்கியம். ஆனா மசாலாவே பிரியாணி ஆக முடியுமா ? Graphics பொண்ணு பாட்டுக்கு ஆட்டம் போடறது novelty. ஆனா எல்லா பாட்டிலயும் கண்டிப்பா graphics இருக்கறது இம்சை. Especially, அந்த boom boom பாட்டுல Graphics பசங்க ஆடறது கொஞ்சம் ஓவர். ‘ஷங்கர் படத்தில Technical ஆ மிரட்டிருக்கார் ‘ னு விமர்சனம் எழுத யாரும் மறந்துடக் கூடாதுங்கறதுல ரொம்ப குறியா இருந்தா மாதிரி இருக்கு.

பிரியாணிக்கி வாசனை சேக்க ஒரு கிராம்பு, கொஞ்சம் பட்டை, துளி லவங்கம் சேக்கலாம். ஆனா எல்லாமே நெறைய சேத்தா சாப்ட முடியாது. அஞ்சு Boys க்கும் சரிசமமா வாய்ப்பு குடுக்கணும்னு ரொம்ப மெனக்கெட்ட ஷங்கருக்கு ‘அஞ்சா ‘ நெஞ்சர்னு அவார்டு வேணா கொடுக்கலாம். அஞ்சு Boys ல ஒருத்தர் Prostitue ஓட பேசிட்டு வந்தா மத்த நாலு பேரும் என்ன பண்ணாங்கன்னு காமிச்சே ஆகணும்னு என்ன கட்டாயமா ? மொத மொத காட்சிலேந்து இதே கூத்துதான். ஷங்கர்…ஒங்களுக்கு இத விட கற்பனையோட opening பண்ண தெரியலைன்னு சொல்லாதீங்க…அஞ்சு பேரொட background ஐயும் புட்டு புட்டு வச்சிட்டு படத்தை ஆரம்பிக்கும் போது ஆர்வத்துக்கு பதிலா அயர்ச்சிதான் வருது…

அடுத்தது இளமை…பாருங்க….இளமைக்கும் பிரியாணிக்கும் எதுவும் சம்பந்தம் இல்லன்னா பிரியாணிய choice ல விட்டுட்டு விமர்சனத்த தொடர்ந்து எழுத வேண்டியதுதான். எல்லாத்துக்கும் சரிசமமா எழுதறேன் பேர்வழின்னு ‘பிரியாணிய சமச்ச ஒடனே சாப்படறது நல்லது, ஆனா சமச்சிட்டி இருக்கம்போதே சாப்டா பேதிதான் ‘ னு கன்னா பின்னா ன்னு எழுதக் கூடாது…anyway, இந்த சரிசம பிரச்சினையத் தான் பாத்துட்டோமே…இளமைக்கு வருவோம்…இளமைங்கற போர்வைக்குள்ள விரச முள்ளுங்க ஏராளம்…குத்துது ஷங்கர்… ‘அது வளர்ரதுக்கு இல்லடா கெட்டி யாரதுக்கு ‘ மாதிரி வசனம்லாம் ர்ர்ர்ரெம்ப ஓவர். ஒரு டிக்கி லோனாவோ…கப்ளிங்ஸோ பிரபலம் ஆச்சுன்னா அதுக்கு ஒரு கவுண்டமணி செந்திலோட காமெடி டைமிங் முக்கிய காரணம். இது என்னாடான்னா Unstrelised ஊசியால கிசு கிசு மூட்ட முயற்சி பண்ணாப்பல இருக்கு…ரத்தக் கிளறி…

படத்துக்கு ஆறுதலான விஷயம் ரெஹ்மானோட இசை. ஆனா பின்னணி இசைக்கு கொஞ்சம் தூங்கிக்கிட்டே இசையமச்சாப்ல இருக்கு…என்ன இருந்தாலும் தெருக்கூத்துக்கு western style music லாம் ஒட்டல. அன்பே சிவம் ல ஒரு ‘நாகரிகக் கோமாளி ‘ மாதிரி அசத்த்லான பாட்டு போட்டுட்டு, அதே கூட்டம் (கூத்து பட்டறை) western பாட்டுக்கு ஆடறதும், அதை குடிசை ஜனங்க ரசிக்கறதும் ரொம்ப செயற்கை.

Old is Gold ங்கறது ரொம்ப சரி. செந்தில் தான் படத்தோட ரெண்டாவது ஆறுதல். ரெண்டு scene வந்தாலும், நச்…

கடசில ஒரு விஷயம். இந்த படம் ஓஹோன்னு ஓடிச்சுன்னா தமிழ்நாட்டு ரசிகர்களும் இளைஞர்களும் ஒரு புது ஸ்தானத்துக்கு உயர்ந்துடுவாங்க, அது நிச்சயம்.

iamkuupi@yahoo.com

Series Navigation

கூப்பி

கூப்பி