Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்
திண்டுக்கல் லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொல்வார்….
“பழைய சினிமாவைப் பாருங்க…. கதாநாயகன் கதாநாயகிய நெனச்சு தனியா ஒரு பாட்டு படிப்பாரு. கதாநாயகியும் பூப்பறிச்சுகிட்டே கதாநாயகன நெனச்சு தனியா ஒரு பாட்டு படிக்கும். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து டுயட் பாட தொடங்கிடுவாங்க…. ‘
அப்படித்தான் இந்த பூச்சிகளும் !!!
முதலில் ஆண்பூச்சி ஒரு பாட்டு பாடும். பதிலுக்கு பெண்பூச்சியும் ஒரு பாட்டு பாடும். பிறகு இரண்டு பூச்சிகளும் சேர்ந்து டுயட் பாடும்.
என்ன, இன்னிசைக் கச்சேரி எப்படி நடக்கிறது என இனி பார்ப்போமா ?
பூச்சிகளுள் பல இன்னிசைக் குழுக்கள் இருந்தாலும், இரண்டுதான் முக்கியமானவை. அவற்றுள் முதலில் வருவது சிக்காடா (Cicada).
Cicada என்பது நாவாய் வகை பூச்சி ஆகும். அவை Homoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Cicada க்களில், உலகம் முழுதும் சுமார் 1500 சிற்றினங்கள் உள்ளன. அவை உலகின் அனைத்து வெப்பமண்டல நாடுகளிலுமே இருக்கும். பொதுவாக எந்தவொரு பூச்சியும் ஒரு சில வாரங்களோ, ஒரு சில மாதங்களோதான் உயிாி வாழும். அதிகபட்சம் ஒரு சில வண்டினங்கள் ஓரிரு ஆண்டுகளும் , இராணிக்கரையான்களில் ஒரு சில 15-25 ஆண்டுகளும் உயிாி வாழும். ஆனால் இந்த Cicada க்கள் சாிவ சாதாரணமாக சுமார் 17 ஆண்டுகள் வரை உயிாி வாழும். Cicada க்களில் இரண்டு வகை உண்டு. முதல்வகை 13 ஆண்டுகள் வரை உயிாி வாழும். அடுத்த வகை, 17 ஆண்டுகள் வரை உயிாி வாழும்.
கலவியை முடித்தபின் பெண்பூச்சி முட்டை வைக்க ஆரம்பிக்கும். ஒரு பெண்பூச்சி சுமார் 600 முட்டைகள் வரை வைக்கும். மரங்களின் பட்டையைப் பிளந்து, முட்டையிடும் கருவியை உள்ளே செலுத்தி முட்டை வைக்கும். இந்த முட்டைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பொதுவாக முட்டைகள் சிறு சிறு முட்டைக் கூடுகளிலேயே இருக்கும். பின்னாி முட்டையில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்தில், சிறு சிறு இளம்ிகுஞ்சுகள் வெளியில் வரும். வெளியில் வரும்போது, முன்னங்கால்களைத் தவிர, அனைத்து உடல் உறுப்புகளும் ஒரு கூட்டுக்குள் அடைபட்டிருக்கும். இந்த இளம்குஞ்சுகள் மரப்பட்டையில் இருந்து கீழே குதித்து, முன்னங்கால்களைக் கொண்டு, பூமியைத் தோண்டி, மரங்களின் வேருக்குள் சென்றுவிடும். பிறகு ‘ஹாயாக ‘ மரங்களின் வோிகளில் உள்ள சாறினை உறிஞ்சிக் குடித்துப் பொழுதை ஓட்டும். என்றும் மாாிக்கண்டேயனாக பல ஆண்டுகளுக்கு இளம்ிகுஞ்சுகளாகவே இருக்கும். பின்னாி, குறிப்பிட்ட காலக்கெடுவின் முடிவில், முழு பூச்சியாக வெளியில் வர ஆயத்தம் செய்யும். அப்போது மண்ணின் மேற்பரப்பிற்கருகில் (பூமி மட்டத்திற்குக் கீழே சுமார்15 செ.மீ) வந்து, ஒரு தற்காலிக அறையை (Waiting cell) அமைத்துத் தங்கும். மேலும், தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பிக்கும். இந்த கோபுரம் தற்காலிக அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கோபுரம் பூமி மட்டத்திற்கு மேலே சுமார் 6 அங்குலம் (15 செ.மீ) வரை இருக்கும். பிறகு தகுந்த பருவகாலம் வரும்வரை தற்காலிக அறையிலேயே இருக்கும். காலநிலை மாறிய பின்னாி முழுமையான பூச்சியாக வெளியில் வரும்.
இங்குதான் ஆர்க்கெஸ்ட்ரா அத்தியாயமே ஆரம்பிக்கிறது. இங்கும் இன்னிசைக் கச்சேரியின் சூட்சுமம் இனப்பெருக்கம்தான் !!
கோடையிலும், வேனில் காலத்திலும், ச்சிற்ப் ச்சிற்ப் என்றும், க்ரீச் க்ரீச் என்றும் மரங்களிலிருந்து ஒலி வருமே, அதுதான் இவற்றின் இன்னிசைக் கச்சேரி !!! சரி, இவை எப்படி பாடுகிறது தொியுமா ? அந்த இன்னிசைக் கருவி Tymbals எனப்படும். Tymbals எனப்படுவது ஒரு சோடி தடித்த சவ்வுகள் ஆகும். இவை Cicada வின் அடிவயிற்றின் முடிவில் இருக்கும். இந்த சவ்வுகளை அத்தோடு உட்புறமாக இணைந்திருக்கும் தசைகள் உள்ளிழுக்கும். பின்னாி பழைய நிலைக்கே விட்டுவிடும். இதை ஒரு நொடிக்கு பலநூறு முறை செய்வதால் இன்னிசையாய் ஒலிக்கிறது.
பகல் பொழுதிலேயே இன்னிசைக் கச்சேரியை நடத்தினாலும் கூட, மழையற்ற, நல்ல அமைதியான முன்னிரவு பொழுதில்தான் இந்த கச்சேரி மிகத்தெளிவாகக் கேட்கும். முதலில் ஆண்பூச்சி, ‘ ‘பூங்காற்று திரும்புமா…. எம் பாட்ட விரும்புமா ? ‘ ‘ என்பதைப் போல பாட ஆரம்பிக்கும். உடனே எங்கோ, கண்காணாத இடத்தில் இருக்கும் பெண்பூச்சி, கலவிக்குத் தயாராய் இருக்குமானால், பதிலுக்கு, ‘ ‘இராசாவே வருத்தமா…. ஆகாயம் சுருங்குமா ? ‘ ‘ என்று பாடும். உடனே ஆண்பூச்சி, முதல்மரியாதை சிவாஜி கணேசனைப் போல பாட்டுவரும் திசையிலேயே பெண்பூச்சியைத் தேடிக்கொண்டு போகும். எங்காவது ஓரிடத்தில் பெண்பூச்சியைக் கண்டுபிிடித்துவிடும். உடனே, ‘ ‘அடி நீதானா அந்தக்குயில் ? ‘ ‘ என்று பாடிப் பரவசமடையும். பின்னாி இரண்டு பூச்சிகளும் சேர்ந்து கொஞ்சம் டுயட் பாடும் (அட மெய்யாலுந்தாங்க !!!). அப்புறம் சத்தமின்றி கலவியில் இணைந்துவிடும்.
அடுத்த வகை பூச்சிகள் கிரிக்கெட் (Cricket) எனப்படும் பிள்ளைப்பூச்சிகள். இவை Orthoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. கிரிக்கெட்களில், உலகம் முழுதும் சுமார் 20,000 சிற்றினங்கள் உள்ளன. இவையும் உலகின் அனைத்து வெப்பமண்டல நாடுகளிலுமே இருக்கும். வெட்டுக்கிளிகள் கூட இதே Orthoptera என்ற வரிசையைச் சேர்ந்ததுதான். இவையும் சிக்காடாவைப் போலவே பாடிக்கூடும். ஆனால் இந்த இன்னிசைக் கருவி இருக்கும் இடம்தான் வேறு. கிரிக்கெட் பூச்சிகளின் முன்னிறக்கைகளில் ஒரு தடித்த நரம்பு இருக்கும். அவற்றின் மீது, சீப்பில் இருக்கும் பற்களைப் போலவே வரிசையாக பற்கள் இருக்கும். ஓர் இறக்கையை இன்னொரு இறக்கையின்மீது ேிதய்க்கும்போது, இந்த சீப்புகளும், ஒன்றின் மீது மற்றொன்று உராயும். அதாவது, ஒரு சீப்பில் இருக்கும் பற்களை நாம் நம் விரல் நகத்தால் ேிதய்ப்பது போல. அப்போது விதவிதமான இராகங்களில் கீதம் உருவாகும். சிற்றினங்களுக்கு சிற்றினம் இந்த கீதம் வேறுபடும்…. அவ்வளவே!!!
அது சரி, பூச்சிகள் மிமிக்ரி கூட செய்யும். அதைப்பற்றி தொிந்து கொள்ள வேண்டுமா ? …. அடுத்த வாரம்!!
—-
amrasca@yahoo.com
- சுமை
- பூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]
- மெய்மையின் மயக்கம் – 6
- The School of Rock (2003)
- செம்புலப் பெயல் நீர்
- இதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு
- ஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘
- தென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு
- கடிதங்கள் ஜூலை 1,2004
- ஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி
- அன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு
- கவிக்கட்டு 13 -திறந்து விடு
- பூச்சிகளின் ஆர்க்கெஸ்ட்ரா
- வேண்டுதல்!!
- ஏழாவது சுவை
- இசை ஒவியம்
- கவிதையாதெனில்….
- இழப்பு
- கவிதைகள்
- மதிய உணவு
- இருப்பிடம்
- வேர்வை
- விலகி
- திரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26
- இருள் (நாடகம்)
- தீர்வுகள் கிடைக்குமா… ?
- மஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்
- விதியின் சதி
- ஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்!
- இன்னொரு ரஜினிகாந்த் ?
- கலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே ?
- தீம்தரிகிட தலையங்கங்கள்
- ஞாநியின் டைரி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10
- பு லி த் ே த ா ல்
- இஸ்லாத்தின் தோற்றம்
- வாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி
- கரைதலின் திறவுகள்…
- இரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…
- சின்னச் சின்ன..
- வயோதிகக் குழந்தை
- ஒளிருமே
- தமிழவன் கவிதைகள்-பனிரெண்டு
- நண்பா! (வெண்பா)
- நறுக்குகள்