தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

யாழினி


மொத்த விலை ஷாப்பிங்க் கிளப்பில் வண்டி நிறைய சாமான் நிறப்பிக் கொண்டு வருகிறீர்கள். செக்கவுட் கவுன்டரில் உள்ள கம்ப்யூட்டர், பொருட்களை வெளியில் எடுக்கமலே உங்கள் வண்டியில் உள்ள பேப்பர் டவல், டோர்டிலாஇ, பாஸ்மதி, ஒரு வருடத்திற்கான ப்ளேடு ஆகியவற்றை ஒன்று விடாமல் உங்கள் கிரெடிட் கார்ட் கணக்கில் பதிவு செய்கிறது. 8 மணிக்கு ஆஸ்கர் பார்ப்பதற்காக வீடு திரும்புகிறீர்கள். வீட்டில் நுழையும் போது உங்கள் காரை அடையாளம் கண்டு Garage திறந்து வழிவிடுகிறது. உள்ளே வந்து ரெப்ரிஜிரேடரை திறக்கிறீர்கள். ‘சென்ற வாரம் வாங்கி வைத்த சிக்கன் நாளையோடு காலாவதியாகிறது, சீக்கிரம் சமைக்கவும் ‘ என்றூ எச்சரிக்கிறது. சிக்கனை எடுத்து மைக்ரோவேவில் வைக்கிறீீர்கள். சிக்கன் பாக்கேஜில் உள்ள சமையல் பக்குவ முறையை தானாகவே படித்து சமைக்கிறது. அடுத்த வாரத்திற்கு வேண்டிய துணிகளை தூக்கி சலவை இஇயந்திரத்தில் போடுகறீர்கள். இயந்திரம் கத்துகிறது, ‘எத்தனை முறை சொல்வது, ஸ்வெட்டர்களை மற்ற துணிகளாடு போடாதே ‘.

இவை அனத்துக்கும் காரணமாக இருக்கப் போவது RFID தொழில்நுட்பம். இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அல்ல. இரண்டாம் உலகப்போரில் எதிரி விமானங்களை தோழ நாட்டு விமானங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மிகச் சிறிய RFID தகடுகள் நீங்கள் வாங்கும் பொருட்களில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த தகடுகளில் (tag ) EPC code என்ற எண் எழுதப்பட்டிருக்கும். இப்பொழுது பயன்படுத்தப்படும் பொருட்களின் பாக்கேஜில் உள்ள UPC எண் மூலம் ஒரு குறிப்பிட்ட வகை பொருளை மட்டுமே அடையாளம் காண முடியும். EPC code மூலமாக தொழில்சாலையிலிருந்து வெளியே வரும் ஒவ்வொரு கோக் கேனையும் தனித்தனியாக அடையாளம் காணலாம். இந்த தகடுகளை படிப்பதற்கு ரீடர்கள் தகடுக்கு நேர்கோட்டில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. முப்பது அடிக்கு அப்பால் இருந்து கூட படிக்கலாம். தகடுகளில் இருக்கும் சிறிய ஆண்டனா மூலம் பரப்பப்படும் ரேடியோ அலைகளை சற்று தொலைவில் உள்ளா ரீடர் கருவிகள் படித்து பதிவு செய்யலாம்.இ கப்பல் தளங்களில் வரும் பொருட்கள் எங்கு செல்கிறது என்று கண்காணிக்கலாம். டிஸ்னி லாண்டில் கிருத்துமஸ் விடுமுறைக் கூட்டத்தில் உங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க உதவலாம். ந்த தொழில்நுட்பட்தை Privacy அமைப்புகள் ( தனிமை விரும்பிகள் என்று வைத்துக் கொள்வோம்) ஏன் எதிர்க்கிறார்கள் ?

சென்ற வருடம் வால்மார்ட்டும், கில்லெட் கம்பெனியும் இணைந்து RFID தொழில்நுட்பத்தை சோதித்தார்கள். கில்லெட் ப்ளேடு பாக்கிங்கில் மிகச் சிறிய RFID தகடுகள் ஒளித்து வைக்கப்பட்டது. நுகர்வோர்கள் Shelf இலிருந்து இவற்றை எடுக்கும்போது RF அலைகளால் இயக்கப்பட்ட புகைப்படக் கருவி மூலம் போட்டோ எடுக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தினால் கம்பெனிகள் ஏராளமான டாலர்கள் சேமிக்கலாம். ஒவ்வொரு பொருட்களிலும் RFID தகடுகள் பயன்படுத்தப்பட்டால் உங்களுடைய ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படலாம். ஐரோப்பிய வங்கிகள் இந்த தகடுகளை ரூபாய் நோட்டுகளில் பதிக்க முயற்சி செய்கிறது. நீங்கள் சப்வேயில் நடந்து செல்லும் போது RF ரீடர் மூலம் உங்கள் பையில் $300 உள்ளது என்று கண்டுபிடித்து திருடர்கள் உங்களைத் தாக்கலாம். மிச்சலின் நிறுவனம் இந்த தகடுகளை கார் டயர்களில் பதிக்கப் போகிறது. நீங்கள் போகும் இடங்களை நீங்கள் அறியாமலே கண்காணிக்கலாம். ஏற்கெனவே ஷாப்பிங்க் கார்டு மூலமாக நீங்கள் எந்த பிராண்டு உள்ளாடை வாங்குகிறீர்கள், எந்த வகை சிகரட் வாங்குகிறீர்கள், இமெயில் முகவரி போன்று உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் விற்கப்படுகின்றன. அதனால் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முன்னர் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர Privacy அமைப்புகள் முயற்சிக்கிறார்கள்.

மேலும் அறிய

http://www.nocards.com/,

http://www.epcglobalinc.org

– யாழினி

yaazhini_s@yahoo.com

Series Navigation

யாழினி

யாழினி