உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ஹேமா சுவிஸ்


*************************************************
கைகள் கோர்த்துக்கொண்ட
இரு சாத்தான்கள்
மண்டையோடுகள் தவிர்த்து
மட்டையோடு விளையாடும்
நேரமின்று.

உள்ளும் வெளியிலும்
தமிழனின் சில உயிர்கள்
சிரட்டைகள் தங்கிய
மழை நீருக்குள்ளும்
அங்குமிங்கும் மிச்சமாய்
இன்னும் கொஞ்சம்.

தமிழனின் தலைகளைப்
பந்தாக நினைத்தாலே
யாரோ ஒருவர் கையில்
உலகக்கோப்பை
உறிஞ்சும் இரத்தம்
உலகம் காணாமல்
மட்டையோடு
எலும்புகளும் பத்திரமாய்.

சூரியனைத் தொலைத்த
மொட்டைப் பனைமரமென
நீள வளர்ந்திருக்கிறது
உயிரற்ற நிலை
தாய் மண்ணுக்குள்
வாய்ப்பூட்டுப் போட்ட
மௌனப்போராடமும் அப்படியே.

இதுவும் கடந்து போகுமென
பேசமுடியாதிருக்கிறார்கள்
அவர்கள்
விளையாடியபடிதான்
இன்னும் இவர்கள்!!!

ஹேமா(சுவிஸ்)

[ இலங்கை வென்றால்
இறந்த இராணுவத்தாருக்குச்
சமர்ப்பணமாம்
விளையாட்டில்கூட
நாடா…..இனமா
இந்தியாவே வெல்லட்டும் ! ]

Series Navigation

ஹேமா(சுவிஸ்)

ஹேமா(சுவிஸ்)