ஒற்றைக்கால் இரவு!

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

ரசிகன்



அர்த்த ராத்திரியின்
ஒரு வெண் புள்ளியில்
படர்ந்திருக்கிறது என் வானம்…

மூன்றாம் பாலினத்து இசையோடு
மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது
என் உலகம்!

பரவசங்கள் நிரம்பிய
உன் வருகையை
சிலாகித்துக்கொண்டிருக்கின்றன
என் அறை வாசமும்
சுவர் குறிப்புகளும்!

அவ்வளவு எளிதாய்
தொடங்க முடியாத கவிதையை
எவ்வளவு சுருக்கமாய்
முடித்து விடுகிறது உன் தீண்டல்…

இதோ…
அடங்கிடாத அவ்வழகை
என் மூன்றாம் சாமத்து நாடி நரம்புகள்
வரையத் தொடங்கிவிட்டன!
வண்ணம் தீட்டிட
ஒற்றை காலில் நிற்கிறது இரவு!”

– ரசிகன்

Series Navigation

ரசிகன்

ரசிகன்