சின்னப்பயல் கவிதைகள்

This entry is part of 44 in the series 20110403_Issue

சின்னப்பயல்


அமிழ்ந்தகல்
—————
சிறியஅலையையும்
சிலநீர்க்குமிழிகளையும்
உனக்குள்
உருவாக்கிவிட்டு
அசையாமல்அமிழ்ந்த
கல்லாகக்கிடக்கஎனக்கும்
விருப்பந்தான்உன்னில்.
ஏனெனில்
உருளும்கல்
பாசம்சேர்ப்பதில்லை.

சிலரும்பலரும்
—–
நான்இங்கிருந்த
வரையில்எனக்கு
எதுதேவையோ
அதைமட்டுமே
செய்துவந்தேன்
பிறர்எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்பஅல்ல.
எனினும்சிலருக்கு
என்னைப்பிடித்திருந்தது
பலருக்குஇல்லை.
அந்தசிலரும்
என்போலவே
தனக்குப்பிடித்ததை
மட்டும்செய்து
வந்தனர்போலும்.

நனைக்க/நினைக்க
——
என்னை
என்னில்
என்னுள்
உன்னால்
நனைக்க
என்னில்
என்னுள்
உன்னை
நினைக்க

Series Navigation