எல்லைகடப்பதன் குறிப்புகள்

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

ராம்ப்ரசாத்


வாசங்களை உணர்ந்திராத‌
பிரதேசமொன்றிலிருந்து நான்
அவதரித்திருந்தேன்…

என் நாசிகள்
வாசங்களை தனித்துணரத்
தவறுவதில்லை…

படபடவென என் இறக்கைகள்
தென்றலுடன் ஆவேசமாய் உறவாடுகையில்
பதிவதில்லை வாசங்கள்
என் சிந்தனைத்தொகுப்பில்…

இறக்கைகளை வீசுவதில் எத்தனை வேகம்…
காற்றின் சமிஞைகளில் எத்தனை நுண்மம்…
வானியக்கங்களில் ஒளிந்துள்ள வளியியக்கங்கள்…
இவையனைத்தையும் தவறவிடும் பூவியக்கங்கள்…

வசீகரங்களில் பூக்களின் எல்லைகளை
நான் கடந்துவிட்டதைப்பற்றி
எள்ளளவும் கவலையில்லை எனக்கு…
என் போன்றொரு வண்டுக்காய்
என் தனிமையைக் கூறுபோடக்
காத்திருக்கிறேன் நான் அவதரித்த‌
பிரதேசத்திலேயே…

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்