இடம்பெயர் முகாமிலிருந்து

This entry is part of 29 in the series 20101121_Issue

மூலம் – சுபாஷ் திக்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


மொழிபெயர்ப்புக் கவிதை

அந்தகாரத்தில் மூழ்கிப்போன
சாபமிடப்பட்ட இரவொன்றில்
நெற்றிப் பொட்டை எடுத்து
நிலத்தில் போட்டு மிதித்தேன்

சாட்சிக்காக எஞ்சிய
ஒரே ஒரு இதயமும்
நெஞ்சு வெடித்துச் செத்துப் போயிருக்கும்
தடயங்களை விட்டுவைக்காமல்

மணாளப் பறவைகள்
இன்னும் பறக்கின்றன
கூந்தல் கற்றைகளுக்குள்
விரல்களை நுழைவித்தபடி

முகாமின் முள்வேலியில்
விஷக் கள்ளிகள் மலரட்டும்
தந்தை பெயரறியாமல் பிறக்கும் பிள்ளைகளுக்கு
முள்ளின் விஷம் உணர்த்தட்டும்

Series Navigation