இருந்து …இறந்தது…….

This entry is part of 35 in the series 20091106_Issue

தினேசுவரிஎனக்கும்
ஒரு வாழ்க்கை
இருந்தது….

அதில்
ஒரு இரவும்
ஒரு பகலும்….
கடவுள்
விட்டுச் சென்ற
சில கனவுகளும்….

சின்னதாய்
பல நட்சத்திரமும்..
பெரியதாய்
சில நிலாக்களும்
கால் முளைக்காத
மழைத்துளிகளும்….

துணைக்கென
நான்கு சுவர்களில்
சூரியனும்
சுட்டெரிக்காத
அன்புகளோடு

எனக்கும்
ஒரு வாழ்க்கை
இருந்தது……………

தினேசுவரி, மலேசியா

Series Navigation