ஆயுதங்களால் போரிடுவது எளிதானது

This entry is part of 35 in the series 20090926_Issue

நட்சத்திரவாசிஉனது குவிந்த காளானை
திறக்காமல் காட்டுவதை
பிரியப் படுகிறாய்
பெண்மையின் சிறப்பென
எல்லா இரவுகளிலும் விரியும்
மஞ்சள் நிற பூவோ
அதிகாலையில் சுணங்கிப் போகிறது
ஒன்றை வடித்துக் காட்டவும்
உணர்வை மொழிப்பெயர்த்து காட்டவும்
செய்யும் நீயே
உடலின் துரோகங்களுக்கு
பதிலடி கொடுப்பதாக பாவித்து
கவிதைகளை இயற்றுகிறாய்
எல்லாம் பெண்மையாக பார்க்கும் நீயே
அதை போராட்டமாகவும் ஆக்குகிறாய்
சொல்லாமல் விட்டு போன
எல்லா அர்த்தங்களையும்
மறுவாசிப்பு செய்கிறாய்
எப்படியாக இருந்து விட்டு போ
உன்னுடன் எனக்கு முரண்பாடு உண்டென்றாலும்
இணக்கமான ஒரு முடிச்சு உள்ளது
உனது ஆயுதங்களால்
என்னை போரிட சொல்லும்
அந்த போர்களம் ஒன்றே போதும்
நானொரு வீரன் என்பதை
உறுதிபடுத்திட

mujeebu2000@yahoo.co.in

Series Navigation