This entry is in the series 20090904_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்



கரைந்துண்ணும் காகங்கள்
சேர்ந்தே வாழும் எறும்புகள்

மனிதர்களாகவே வாழும் நாம்
சிலநாட்கள்
காகங்களாய்க்
கரைந்தாலென்ன?
எறும்புகளாய்
வாழ்ந்தாலென்ன?
அந்த நாட்கள்தான்
பண்டிகை நாட்கள்

விழுவதும் எழுவதுமாய்
வாழ்க்கை அருவி
அது சோம்பல் முறிக்கும்
பள்ளப் பிரதேசம்தான்
பண்டிகைகள்

இங்குதான்
சிறகு நனைக்கின்றன
சிட்டுக்கள்
சீட்டியடிக்கின்றன
பூச்சிகள்

இதோ
நெருங்கிவிட்டன
பண்டிகைகள்

நாமும்
சிறகு நனைப்போம்
சிட்டுக்களாய்
சீட்டியடிப்போம்
பூச்சிகளாய்¢

Series Navigation