நட்சத்திரவாசி

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

நட்சத்ரவாசி


நட்சத்திரங்கள் ஒளிவீசி புனைவையும்,கற்பனையும்
எழுதிசெல்கிறது இன்றைய என் வெறுமையில்
மௌனமாய் வாழ்ந்தலையும் மேககூட்டங்களில்
அவள் வருகிறாள் எனது உயிரை பிடித்திழுக்க
அலைகடலின் ஆர்பரிப்புகளுக்கிடையில் நான் பயந்து
சென்றொளிகிறேன் ஒரு சிறு மீனினை போல
அவளின் குதிரையோ எதையும் ஊடுருவிபோக வல்லது
நான் என் கனவின் பெருந்தழலை நீட்டுகிறேன்
அவளது சூட்சுமங்களை குலைத்துபோட
அதீத விளையாட்டுகளின் முடிவில் எனை அவள்
சிறைப்பிடித்தாள் நட்சத்திரங்களுக்கு செல்வதை பற்றி
ஆணையிட்டாள் நான் நட்சத்திரவாசியாகுகை குறித்து.
எல்லா இயலாமைகளின் புதிர் வெளிச்சத்தில் எனை
கடத்திக் கொண்டு போனாள் விண்னுலகிற்க்கு
அவள் ஆளும் நட்சத்திர உலகில்
இன்று நானொரு நட்சத்திரவாசி
நட்சத்திரங்களுக்கிடையில் அவளின் அடிமையாக
இருத்தல் குறித்து யோசித்தவாறிருக்கும்
என்னை நளை ஒரு நட்சத்திரம் உங்களிடம்
சொல்லலாம் இரவின் ஒரு பொழுதில்
mujeebu2000@yahoo.co.in

Series Navigation

நட்சத்ரவாசி

நட்சத்ரவாசி