பறவையின் இறப்பு

This entry is part of 45 in the series 20090731_Issue

பா. சத்தியமோகன்


ஒரு பறவை பறக்கும்போது பார்த்திருக்கிறோம்

இறக்கும்போது?

நடுவானில் நீந்தும்போது இறக்க நேரிட்டால்

எங்கு வீழுமோ அங்கு சென்று பார்த்தால் தெரியலாம்

அச்சமயம் அப்பறவை

மழைபோல் வீழுமோ?

இறக்கப் போகும் பறவையைப் பற்றி எதற்கு சிந்திப்பு?

இருக்கும் பறவைகள்

பறப்பதையே பார்ப்போம்

*****

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation