கோபங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

வீ.அ.மணிமொழி


நிசப்தம் உலாவும் நேரம்…
வானத்தைப் பெயர்த்து
இரண்டு கோபங்கள் தரையிறங்கின..
கோபங்களுக்கிடையே விவாதம்
இங்கும் தொடந்தது.

கோபங்கள் தங்களை அளந்து பார்க்க
ஒரு சிறிய அளவுகோளை
கையில் எடுத்துக் கொண்டன.

அளவுகோளால்
தங்களின் கோபத்தை அளந்து பார்த்தன.
கோபம் 1: 5.0 சென்டி மீட்டர்…
கோபம் 2: 5.00 சென்டி மீட்டர்…

இரண்டு கோபங்களும்
கோபத்தின் நீளத்தை அதிகப்படுத்திக் கொள்ள
கொச்சை வார்த்தைகளை
ஆயுதமாகப் பயன்படுத்தின…

இன்னும் கொஞ்சம் கோபத்தை மேலோங்கி காட்ட…
காயப்படுத்தவும் தயாராயின…
கோபங்களுக்கு நீளம் போதவில்லை…

மேலும் கோபத்தை வெளிகொணர
தங்களின் உறுப்புகளை
ஒவ்வொன்றாக களற்றி
வெகு தொலைவில் ஏறிந்தன.
கோபங்களுக்கு இன்னும் நீளம் போதவில்லை…

கோபங்கள் உச்சத்தை அடையாளப்படுத்துவதற்கு
மீதமுள்ள உடலின் சதைகளைப் பிய்த்து எறிந்து
சமாதியில்… கோபத்தை
அளந்து பார்த்துக் கொண்டிருக்க
ஈக்கள் அதன் மேல் மொய்க்க தயாராயின!

வீ.அ.மணிமொழி (moli143@gmail.com)
மலேசியா

Series Navigation

வீ.அ.மணிமொழி

வீ.அ.மணிமொழி