பேருண்மை…

This entry is part of 36 in the series 20090611_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


இன்னொரு சொகுசான
இடத்தில் சந்திப்பதை
இயல்பாய் மறைத்து
இப்போதெல்லாம் நண்பர்கள்
கூடுவதே இல்லை
என்றேன் அந்த
பழைய தேனீர்க் கடைக்காரரிடம்.
கடைசியாய் அவர்
கடையில் வைத்து
பேசிய விஷயம்
பேருண்மையைப் பற்றி
என்று ஞாபகம்.

Series Navigation